Rahul gandhi : '’பணக்காரன் படிச்சா போதுமா? SYSTEM-ஏ இங்க தப்பா இருக்கு!’’ மக்களவையில் ராகுல் கர்ஜனை!
தர்மேந்திர பிரதானை அலறவிட்ட ராகுல் காந்தி
தேர்வு முறைகேடு குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் சரமாரி கேள்வி
நம்முடைய தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்
நீட் தேர்வில் மட்டுமல்ல.. முக்கிய தேர்வுகள் அனைத்திலும் பிரச்சினை இருக்கிறது
மத்திய அமைச்சர் அவரைத் தவிர அனைவர் மீதும் குற்றம் சொல்கிறார்
தர்மேந்திர பிரதானுக்கு அடிப்படை புரிதல் இருப்பதாக தெரியவில்லை
இலட்சக்கணக்கான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
இந்திய தேர்வு முறையே ஒரு மோசடி என்று அவர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள்
அதுதான் இங்கே பிரச்சனை..
லட்சக்கணக்கான மாணவர்கள் நம்புகிறார்கள்.. பணம் இருந்தால் போதும் தேர்வில் வென்று விடலாம் என்று..
எதிர்க்கட்சியினர் எங்களுக்கும் அதே மனநிலை தான் உள்ளது..
தர்மேந்திர பிரதானிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்
தேர்வு முறையில் பிரச்சனை என்றால், சிஸ்டத்தை சரி செய்ய என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?
ராகுலுக்கு விளக்கம் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர்
ஆக்ரோஷமாக பேச எழுந்த தர்மேந்திர பிரதான்.. கோஷம் எழுப்பிய I.N.D.I.A..
எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது..
யாருடைய certificate-உம் தேவையில்லை..
கத்திக் கூப்பாடு போடுவதால் பொய் உண்மையாகி விடாது
தேசத்தின் தேர்வை தவறாக பேசி உள்ளீர்கள்..
இதைவிட மோசமான ஒரு கருத்தை எதிர்க்கட்சி தலைவரால் பேச முடியாது..
நான் இதைக் கண்டிக்கிறேன்..
2010 ஆம் ஆண்டு மூன்று கல்வி சீர்திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது..
அதில் நியாயமற்ற முறையில் தேர்வுகள் நடைபெறுவதை தடுக்கவும் மசோதா இடம்பெற்று இருந்தது..
உங்கள் கபில் சிபில் கொண்டு வந்த அந்த மசோதாவை ஏன் வாபஸ் பெற்றீர்கள்
மருத்துவக் கல்லூரிகள் அழுத்தம் கொடுத்ததா?
இதையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் எங்களை கேள்வி கேட்கிறீர்கள்..