(Source: ECI/ABP News/ABP Majha)
Karti Chidambaram : "MATCH நடந்தா ஆடனும் அதிமுக-ன் நிலை மோசம்" கார்த்தி சிதம்பரம் ATTACK
கீழடி அகழ்வாய்வு பணியினை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அதனை இருட்டிப்பு செய்தனர். கீழடி அகழ்வாய்வு பணியினை தமிழக அரசு மேற்கொள்வதே சிறந்தது. கீழடியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழ்வாய்வு பணியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்,
கீழடி அகழ்வாய்வு பணியினை மத்திய அரசு மேற்கொள்ளும் போது அதனை இருட்டிப்பு செய்தனர். தமிழக அரசு கீழடி அகழ்வாய்வு பணியினை மேற்கொள்வதே சிறந்தது. கீழடி அகழாய்வு பணியினை தமிழக அரசு மேற்கொள்வதால் உலக அங்கீகாரம் கிடைக்காது என்பது தவறு.
இதன் அறிக்கைகளை 26 மொழிகளில் வெளியிடுகின்றனர் என்றார், மேலும் தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கீழடி அகழ்வாய்வு பணிகள் தாமதமாக துவங்கியதாகவும் தெரிவித்தவர், திமுகவின் B team மாக அதிமுக செயல்படுவதாக டிடிவி தினகரனின் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, மைதானத்தில் விளையாட வந்துவிட்டு விளையாடாவிட்டால் இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.