Dharmapuri Police : ”மீதி பணம் எங்கே?” ஷூவை கழற்றிய போலீஸ்சாட்டையை சுழற்றிய SP
Dharmapuri Police : ”மீதி பணம் எங்கே?” ஷூவை கழற்றிய போ
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உணவகத்தில் உணவு சாப்பிட்ட காவலரிடம், நிலுவை பணம் கேட்ட உரிமையாளரை, காவல் அதிகாரி காலில் உள்ள சூவை கழட்டி அடிக்க சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்ப்பட்டு வரும் நிலையில் அங்கு தினந்தோறும் 2000 மேற்ப்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல், கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் சாப்பிட்ட காவல் அதிகாரி கவேரி சாப்பிட்டு சென்றுள்ளார், அப்போது கடை உரிமையாளர் முத்தமிழ், நேற்று சாப்பிட்ட உணவுக்கு நிலுவை தொகை கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, முத்தமிழை தகாத வார்த்தையால் பேசிவிட்டு . பணத்தையும் தூக்கி வீசிவிட்டு, கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்தகரத்தில் காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் தடுத்ததால், அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஓட்டல் உரிமையாளர் முத்தமிழ் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்,SSI காவேரி மீது புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.
காவலர் சீருடையில், இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீஸ்சாட்டையை சுழற்றிய SP
![செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/db88611116f5fb53e7e387b9ff33dfd61739191169087200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/5b4e1f532ca787adb10cbb00392fdd111739190625263200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/89e8df423a774911519408d6856064301739165344774200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/09/345e022ce9805bc1c7595017546428c21739116727234200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்ஷன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/09/b5f4e4de7ab36061d95683df7cf39ee61739115813372200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)