மேலும் அறிய

”விஜய்க்கு பாதுகாப்பு இருக்கா?” விளக்கம் கேட்கும் அமித்ஷா! மத்திய அரசின் ப்ளான் என்ன?

விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடியாக மாறியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விஜயை நோக்கி விமர்சனங்களை அடுக்கும் நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். 

கரூர் பிரச்சனை ஆரம்பித்த அடுத்த நொடியில் இருந்தே தனது உள்துறை மூலம் கரூர் நிலவரத்தை விசாரித்து சொல்ல உத்தரவு விட்டாராம் அமித்ஷா. மேலும் கட்சி சார்பாக ஹேமாமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து கரூரில் விசாரணை செய்து ரிப்போர்ட்  செய்யவும் உத்தரவிடப்பட்டது. 

கரூரில் பிரச்சாரத்தில் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நோக்கி இந்த விமர்சனங்கள் திரும்பிய நேரத்தில், ‘இது முற்றிலும் பொய், விஜயின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாராவது செருப்பை வீசியிருக்கலாம், மயக்கம் அடைந்தவர்கள் இருந்த இடத்தில் இருந்து தான் செருப்பு வீசப்பட்டுள்ளது” என பதிலடி கொடுத்தார்.

இந்தநிலையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வந்தவுடன் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கரூர் சம்பவத்திலும் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர். 

சமீபத்தில் பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி விஜய் வீட்டு மாடிக்கு மர்ம நபர் ஒருவர் சென்றதும் பரபரப்பை கிளப்பியது. இதனை அடிப்படையாக வைத்தும் உள்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் விஜய் சுற்றுப்பயணம், கூட்டங்கள் நடத்துவதில் எந்த சிக்கலும் வராதபடி நடவடிக்கைகள் எடுக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் தரப்பில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர்.

கரூர் சம்பவத்தை வைத்து தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிடுவதாக எதிர் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை விஸ்டாடோம் ரயில்: முன்பதிவு நிறைவு, காத்திருப்போர் பட்டியல்!
மேற்கு தொடர்ச்சி மலை விஸ்டாடோம் ரயில்: முன்பதிவு நிறைவு, காத்திருப்போர் பட்டியல்!
ரீல்ஸால் வந்த விபரீதம்? புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!
ரீல்ஸால் வந்த விபரீதம்? புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!
10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை.. சிறுமி வழக்கில் அதிரடி முடிவு எடுத்த தமிழக அரசு
10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை.. சிறுமி வழக்கில் அதிரடி முடிவு எடுத்த தமிழக அரசு
செஞ்சி சிறுமி ஹேமலதா மாயம்: 10 நாள் மர்மம்! சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - அடுத்து என்ன நடக்கும்?
செஞ்சி சிறுமி ஹேமலதா மாயம்: 10 நாள் மர்மம்! சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - அடுத்து என்ன நடக்கும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget