மேலும் அறிய

விவசாயிகளே... உங்களிடம் இந்த எண் இல்லையென்றால் PM-KISAN நிதி கிடைக்காது!

நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் தனித்துவ விவசாயி அடையாள எண் (Farmer Registry) பெற அனைத்து VAO அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.

நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது விவரங்களை விவசாயிகள் பதிவேட்டில் (Farmer Registry) இணைத்துத் தனித்துவ விவசாயி அடையாள எண்ணைப் பெறுவதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட விவசாயிகளின் தற்போதைய பதிவு நிலை

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மை சார்ந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் உண்மையான விவசாயிகளுக்குத் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், விவசாயிகள் பதிவேடு உருவாக்கப்பட்டு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 50,565 விவசாயிகள் உள்ளனர். இவர்களில் இதுவரை 41,016 விவசாயிகள் தங்களது விவரங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்து தனித்துவ விவசாயி அடையாள எண்ணைப் பெற்றுள்ளனர். 

இருப்பினும், மீதமுள்ள 9,549 விவசாயிகள் இதுவரை இந்தப் பதிவேட்டில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளனர். விடுபட்ட இந்த விவசாயிகளும் உடனடியாகப் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசுத் திட்டங்களுக்குத் தனித்துவ அடையாள எண் கட்டாயம்

பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் (PM-KISAN) கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 24 தவணைத் தொகைகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அடுத்தகட்டமான 25-வது தவணைத் தொகையை விவசாயிகள் தடையின்றிப் பெறுவதற்கு, விவசாயிகள் பதிவேட்டில் இணைந்து தனித்துவ அடையாள எண் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்கும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கும் இந்த அடையாள எண் மிக அவசியமான ஒன்றாகும். மேலும், வறட்சி, வெள்ளம் மற்றும் காலம் தவறிய கனமழையால் ஏற்படும் பயிர் மகசூல் பாதிப்புகளுக்கான இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியைப் பெறுதல், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக மானிய விலையில் தரமான உரங்கள் மற்றும் விதைகளைப் பெறுதல், டிராக்டர் உள்ளிட்ட நவீன வேளாண் இயந்திரங்களுக்கான மானியங்களைப் பெறுதல் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெறுதல் போன்ற அனைத்து வேளாண்மை சார்ந்த அரசுத் திட்டங்களின் பலன்களையும் பெறுவதற்கு விவசாயிகள் பதிவேடு அடிப்படை ஆதாரமாகத் திகழ்கிறது.

பட்டா மாற்றம் மற்றும் ஆவணங்களை இணைத்தல்

விவசாய நிலங்களின் உரிமம் தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே விவசாயிகள் பதிவேட்டில் எளிதாகப் பதிவு செய்ய இயலும். எனவே, இன்னும் முன்னோர்களின் பெயரிலேயே பட்டா வைத்துள்ள விவசாயிகள், தாமதிக்காமல் தங்களது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களது பெயருக்கு மாற்றப்பட்ட பட்டாவுடன், ஆதார் எண்ணை முறையாக இணைத்துப் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள் பதிவேடு எனப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண்ணை மிக விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள்

இதுவரை விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்யாத 9,549 விவசாயிகளின் நலன் மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் சிறப்பு விவசாயிகள் பதிவேடு பதிவு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் தங்களது சொந்த ஊரிலேயே அலைச்சலின்றி இந்த முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முகாமிற்கு வரும் விவசாயிகள் தங்களது நிலத்தின் கணினி சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டில் உள்ள கைப்பேசி எண் ஆகியவற்றை மறவாமல் எடுத்து வர வேண்டும்.

மாற்று வழிகள் மற்றும் கைப்பேசி செயலி வசதி

சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி, விவசாயிகள் தங்களது பகுதிக்குட்பட்ட வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவோ விண்ணப்பித்துத் தனித்துவ விவசாயி அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள், தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று "FARMER REGISTRY TN" என்ற அதிகாரப்பூர்வச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியின் மூலமாக விவசாயிகள் தாங்களாகவே வீட்டிலிருந்தபடியே புதிய அடையாள எண் பதிவு செய்தல், விவரங்களைப் புதுப்பித்தல் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்களைச் சரிபார்த்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

வேளாண்மைத் துறையின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எந்தவொரு தடையுமின்றி விவசாயிகளைச் சென்றடைவதே மாவட்ட நிர்வாகத்தின் முதன்மை நோக்கமாகும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்தச் சிறப்பு முகாம்கள் மற்றும் இணையவழி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைந்து தங்களது விவரங்களை விவசாயிகள் பதிவேட்டில் இணைத்து, அரசின் அனைத்து வேளாண்மை சார்ந்த நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
"1 கிலோ வாங்கினால் 1 கிலோ இலவசம்!" - விளம்பரத்திற்கு எதிராக ஆட்சியரிடம் விவசாயி முறையீடு!
தவறு செய்த அதிகாரிகளிடமே ஆலோசனையா? - ஆட்சியர் முன்னே ஆதாரங்களை அடுக்கிய சீர்காழி விவசாயி!
தவறு செய்த அதிகாரிகளிடமே ஆலோசனையா? - ஆட்சியர் முன்னே ஆதாரங்களை அடுக்கிய சீர்காழி விவசாயி!
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
Seeman: கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Himalayan 750: மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Embed widget