மேலும் அறிய

"இனி அவர் உங்களுடையவர் எல்லாத்தையும் விட்டுட்டு போறேன்" ரவி - கெனிஷா BREAKUP?

நடிகர் ரவி மோகனின் காதலி என்று கூறப்படும் பாடகி கெனிஷா, இனி அவர் உங்களுடையவர் என்றும், எல்லாவற்றையும் விட்டுப்போகிறேன் என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்

ரவி மோகன் கருத்து வேறுபாடு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், பாடகி கெனிஷாவும் ரவி மோகனும் கான்செர்ட், திரைப்பட நிகழ்ச்சிகள், கோவில் என எல்லா இடங்களுக்கும் ஒன்றாக சென்று வருகின்றனர். இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக, கெனிஷாவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளையில், கெனிஷாவும் சமூக வலைத்தளங்களில் ஆர்த்தியை மோசமாக விமர்சித்து பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், ஆர்த்தி தொடுத்த வழக்கில் நீதிமன்றமும், பொதுவெளியிலோ சமூக வலைத்தளங்களிலோ ஆர்த்திக்கு எதிராக பேசவோ, கருத்துக்களை பதிவிடவோ கூடாது என கெனிஷாவுக்கு தடை விதித்தது.

இப்படியான நிலையில், இன்ஸ்டாகிராமில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டார் கெனிஷா.

இந்த நிலையில் இஸ்டாகிராமில் மேலும் ஒரு போஸ்ட் பதிவிட்டிருக்கிறார்.

அதில், "

நான் சொல்ல வேண்டியதை, என்னால் முடிந்ததை விட அதிகமாகவே சொல்லிவிட்டேன், அதில் பெரும்பாலானவை தேவையற்றவையாகவும் இருந்தன.

இந்த கதைக்குள் காதலோடு நுழைந்தேன், இப்போது அதிலிருந்து மௌனமாக வெளியேறுகிறேன்.


சில இடங்கள் வெறும் இரைச்சல்களாலும், கட்டுக் கதைகளால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டுவிடுகின்றன. அங்கு நல்லதுக்கு இடமே இருப்பதில்லை.

அப்படி நடக்கும்போது, ​​அன்பு கூட வரவேற்கப்படுவதில்லை.

இந்த உலகம் ஏற்கெனவே ஒரு கதையைத் தீர்மானித்துவிட்ட மனிதனைக் காப்பாற்றும் முயற்சியில் என்னை கொடுத்தேன்.

ஆனால், இப்போது ஒன்றைப் புரிந்து கொண்டேன். ஆர்ப்பாட்டங்களுக்கு அடிமையான இந்த உலகில், குழப்பத்திற்கு எதிராக கருணைக்கு அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது.

பொதுமக்கள், சினிமாத் துறை, அவரை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள், அவரைப் பாதுகாப்பவர்கள், கேலி செய்பவர்கள், அல்லது அவரது வாழ்க்கையின் மீது உரிமை கோருபவர்கள் என அனைவருக்கும், இப்போது அவர் இப்போது முற்றிலும் உங்களுடையவர்.

இனி எந்த விளக்கங்கள் இல்லை, சண்டை போடுதல் இல்லை.

நல்லவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தேவை என்றும், அவர்களுக்கு சப்போர்ட் செய்வதே ஒருவர் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்றும் நினைத்தது என்னுடைய முட்டாள்தனம்.

ஆனால் ஒன்றை நான் புரிந்துகொள்கிறேன். ஏமாற்றுக்காரர்களுக்கும், வாழ்க்கையைச் சுரண்டுபவர்களுக்கும் மட்டுமே இங்கு இடம்.

ஆகவே, நான் அவரை அமைதியுடனும், காதலுடனும், முழுமையான பற்றின்மையுடனும் விடுவிக்கிறேன்.

நான் ஏற்றுக்கொண்டிருந்த என் பொறுப்புகள் அனைத்தையும் கூட நான் விடுவிக்கிறேன்.

உண்மையான காதலால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட இந்த உலகம் என்னை அனுமதித்திருக்க வேண்டும் என்பதை மட்டுமே நான் நினைக்கிறேன்.

ஒருவேளை இந்தத் தலைமுறை மென்மையை நம்புவதில்லை போல.

ஒருவேளை மக்கள் உண்மைகளை விட, உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்ட கதைகளையே எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள் போல

நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைத்துவிட்டது.

எனவே, இதை எதிர்ப்பதை நான் நிறுத்துகிறேன்.

நல்லதைக் கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படும் இடங்களில் அதை நிரூபிக்க முயற்சிப்பதை நான் நிறுத்துகிறேன்.

சென்னையை விட்டு போறேன், நான் கைவிடுகிறேன்.

என்னுடைய இசை, தெரபி, இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணமான அனைத்தையும் நான் கைவிடுகிறேன்.

கடவுள் படைத்ததை மனிதனால் உடைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இணையவழி கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாகவே நான் விலகுகிறேன்.

கடவுள் வெல்லும் வரை, இன்ஸ்டாகிராம் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் நான் வெளியேறுகிறேன்.

என் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என் நலம் விரும்பிகள் அனைவரையும் எனக்குத் தேவையான தனிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு பெண்ணியம் வென்றுவிட்டது, மகிழ்ச்சி தோற்றுவிட்டது" என்று கெனிஷா தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
பாபநாசத்தில் நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 
பாபநாசத்தில் நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 
விவசாயிகளே தயாரா? மயிலாடுதுறையில் செப்டம்பர் 29-இல் ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!
விவசாயிகளே தயாரா? மயிலாடுதுறையில் செப்டம்பர் 29-இல் ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Embed widget