PM Modi cabinet : அமைச்சரவையில் 3 தமிழர்கள்! அண்ணாமலைக்கு பதவியா? மோடியின் DECISION
புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி இன்று ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி. அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். யார் யார் அமைச்சராக பதவியேற்க போகிறார்கள், யாருக்கு என்ன பதவி என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு மீண்டும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து எச்.டி,குமாரசாமி அமைச்சராகவிருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 அமைச்சர்களும், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 2 அமைச்சர்களும் பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த தேநீர் விருந்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலையும் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பணிகளை தொடரவுள்ளதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.