Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
கர்நாடகாவில் யானைகள் காப்பகத்தில் இரண்டு யானைகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டதில் இடிபாடுகளில் சிக்கி பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே யானைகள் காப்பகத்தில் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த தம்பதி தங்களது குழந்தையுடன் அப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். யானைகள் காப்பகத்தில் யானைகள் நீரில் குளிப்பதை சுற்றுலா பயணிகள் அருகே நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரு யானைகள் சண்டையிட தொடங்கியது. ஆக்ரோசமான யானை ஒன்று மற்றொரு யானையை கீழே தள்ளி பலமாக தாக்கியது. இதில் யானைகளுக்கு இடையே சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி யானைகளுக்கு நடுவே சிக்கியதை கண்டதும் கையில் குழந்தையுடன் அவரது கணவர் மனைவியின் உயிரைக் காப்பாற்ற இறுதி நொடி வரை போராடினார்.
ஆனால் அப்பெண்மணி யானைகளின் பாரத்தை தாங்காமல் உயிரிழந்தார். விசாரணையில் சென்னையை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் ஜுனேஷ் என்பதும் அவரது வயது 33 என்பதும் தெரிய வந்துள்ளது.
கணவர் குழந்தை கண்முன்னே பெண் ஒருவர் யானையிடம் மிதிபட்டு உயிரிழக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை பதற வைத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















