மேலும் அறிய

கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!

தமிழக அரசியலில் இதுவரை கொள்கைகள், பேச்சுகள், சின்னங்கள் டிரெண்டாகியிருந்த நிலையில், தற்போது ஒரு அரசியல் தலைவரின் உடை அலங்காரமே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நடிகரிலிருந்து முதலமைச்சராக உயர்ந்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் சி. ஜோசப் விஜயின் “ஸ்டைல் பாலிட்டிக்ஸ்” தற்போது இளைஞர்கள் மத்தியில் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக அரசியல் என்றாலே வெள்ளை சட்டை - வெள்ளை வேஷ்டி தான் தலைவர்களின் அடையாள இருக்கிறது.

ஆனால் அந்த வழக்கமான அரசியல் தோற்றத்திலிருந்து விலகி, கோட் சூட்டுடன் வலம் வரும் முதல்வர் விஜய், அரசியலில் புதிய ட்ரெண்டை உருவாக்குவதாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், பிளாக் சூட், வெள்ளை சட்டை, டார்க் டை என முழுமையான ‘பவர் டிரஸ்ஸிங்’ தோற்றத்தில் விஜய் மேடையேறியது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சர் சூட் அணிந்து பதவியேற்ற முதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், விஜயின் உடை அரசியல் இந்த பதவியேற்பு விழாவில் மட்டும் தொடங்கியதல்ல. தேர்தல் பிரச்சார காலத்திலேயே வெள்ளை சட்டை மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்த அவரது எளிய தோற்றம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வாக்குப்பதிவு நாளன்று பல பகுதிகளில் இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் என பலரும் வெள்ளை சட்டை - காக்கி பேன்ட் அணிந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அரசியல் கட்சி சின்னங்களை பயன்படுத்தாமல், உடை மூலமாகவே தங்களது ஆதரவை வெளிப்படுத்திய விதம் கவனத்தை ஈர்த்தது.

சினிமா ரசிகர் கலாச்சாரத்தையும், அரசியல் அடையாளத்தையும் இணைக்கும் இந்த புதிய தோற்றம், குறிப்பாக Gen Z தலைமுறையினரை அதிகமாக கவர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “விஜய் ஸ்டைல்” என்ற பெயரில் கல்லூரி பிரிவுவிழா முதல் திருமண உடை வரை பலரும் அவரது தோற்றத்தை பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அவரது ‘CM Look’ புகைப்படங்கள் பரவி வரும் நிலையில், அந்த தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் மீதான தேடலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலில் உடை என்பது வெறும் ஃபேஷன் அல்ல; அது ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 

அதேவேளையில் ஆடை அதிகாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு புள்ளியையும் இணைத்து, பாரம்பரிய அரசியல் தோற்றத்திலிருந்து மாறி, காலத்திற்கேற்றவாறு இளைஞர்களை கவரும் அரசியல் பிம்பத்தை உருவாக்க விஜய் முயற்சிக்கிறாரா என்ற பேச்சு தற்போது எழுகிறது.

ஒரு காலத்தில் திரைப்படங்களில் விஜயின் ஹேர் ஸ்டைல், வசனம், உடை போன்றவை டிரெண்டான நிலையில், தற்போது அவரது அரசியல் தோற்றமும் தமிழ்நாட்டில் புதிய கலாச்சார உரையாடலாக மாறியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
தனுஷை சுட்டிக்காடி தவெகவை தாக்கிய கனிமொழி..அணல் பறந்த தாராபுரம் பிரச்சாரம்
தனுஷை சுட்டிக்காடி தவெகவை தாக்கிய கனிமொழி..அணல் பறந்த தாராபுரம் பிரச்சாரம்
ABP Nadu Top 10, 28 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 28 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Embed widget