Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
நடிகை சமந்தா இணை நிறுவனராக இருக்கும் ZOY நிறுவனம், *பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்நிகழச்சியில், ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, இணை நிறுவனர் நடிகை சமந்தா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் மகளிர் முன்னணி மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றனர்.
‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், ஹார்மோன் சமநிலை, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் காலப் பொருட்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
மேலும், மூலிகைகள் சேர்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், பாக்டீரியா எதிர்ப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய நாப்கின்கள், மூலிகை வெல்னஸ் லைனர்கள், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ZOY அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி பேசுகையில், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய சமந்தா, பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதுடன், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிந்து, சிந்தித்துத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















