மேலும் அறிய

வனிதாவுடன் கல்யாணம்..மொய்யோட வாங்க! |Vanitha vijayakumarpowerstar marriage | Vanitha speech |

பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார், தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில், திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனதோடு வாழ்த்துகளையும் பதிவு செய்தனர். இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். அதே நேரத்தில் அவர் பவர் ஸ்டாரை மணந்திருக்கலாம் என்று அவரது பதிவிலேயே ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது பிக்கப் டிராப் என்ற படத்தின் அறிமுக விழா என்பது தெரியவந்தது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் யாரும் தவறாக பேசுவதில்லை.. ஆனால் நான் வெளிப்படையாகதான் செய்கிறேன். ஆனால் தவறாக எழுதுகிறார்கள். நான் 40 திருமணம் கூட செய்வேன். எனக்கு அச்சம் இல்லை.

ஆனால் இதுபோல தவறாக பேசுவதால்தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதோடு சர்ச்சை நிற்காமல், அதனை தொடர்ந்து பேசிய பவர்ஸ்டார், “இன்னும் காலம் இருக்கின்றது, திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கின்றது. நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.அடுத்து முறை பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது, வருபவர்கள் மொய் கவர் எடுத்து வரவும்” என நக்கலாக பேசியுள்ளார். வனிதா மற்றும் ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சர்ச்சையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா. சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது. மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர். ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன. பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget