Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?
28 வருடங்களுக்கு பிறகு ரஜினி சுந்தர் சி காம்போல ஒரு படம் அந்த படத்தோட ப்ரொடூயுசர் கமல்ஹாசன் இப்படி சில நாட்களுக்கு முன்னாடி அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா சர்ப்ரைஸ் கொடுத்துச்சு..ஆனா இப்போ ரசிகர்களோட ஆசையில மண் அள்ளி போடுற மாதிரி இந்த படத்துல அதாவது தலைவர் 173 ல இருந்து விலகுறதா இயக்குநர் சுந்தர் சி அறிவிச்சிருக்கறது ஃபேன்ஸ்க்கு ஷாக்க கொடுத்திருக்கு..
28 ஆண்டுகள் முன்னாடி 1997 ல அருணாச்சலம் திரைப்படம் சுந்தர் சி இயக்கத்துல ரஜினி நடிப்புல வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்ட கொடுத்துச்சு. இந்த காம்போ அடுத்ததா தலைவர் 173 ரஜினிகாந்தோட அடுத்த படத்துல மீண்டும் இணையறதா சில நாட்களுக்கு முன்னாடி சினி அப்டேட் வந்துச்சு. அதும் இல்லாம தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினி கமலும் இந்த படத்துல இணையப்போறதா சொல்லப்பட்டது.. தயாரிப்பாளரா களமிறங்குறாரு கமல்..ஷோ ஒரு பெரிய ப்ளாக்பஸ்டர் எதிர்பார்க்கலாம்ப்பா நு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சிருக்கு..
காரனம் திடீர்னு இந்த படத்துல இருந்து விலகுறதா இயக்குநர் சுந்தர் சி அறிக்கை வெளியிட்டு சினிமா வட்டாரத்துல பரபரப்ப ஏற்படுத்திருக்காரு..அந்த அறிக்கையில,
[insta]https://www.instagram.com/p/DQ_baEWExiC/[/insta]
குறிப்பிட்டிருக்காரு.
பொதுவா படங்கள் டிராப் ஆகுறதும் இயக்குநர்கள் நடிகர்கள் விலகுறதும் சினிமாவுல சகஜம் தான். ஆனா இந்த மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார்ஸ் இணையற படத்துல இருந்து சுந்தர் சி விலக காரனம் என்ன…சூப்பர் ஸ்டாரோட அடுத்த லக்கி இயக்குநர் யாரு அப்படிங்கற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில எழுந்துருக்கு..





















