மேலும் அறிய

Puducherry News | ”திருநங்கைனா கேவலமா” CM-யிடம் நேருக்கு நேர் வாக்குவாதம் பதறிப் போன அதிகாரிகள்

புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த திருநங்கை மாணவிக்கு பாலினத்தை காரணம் காட்டி பரிசு வழங்காமல் புறக்கணித்த விளையாட்டு துறையை கண்டித்து, தேசிய விளையாட்டு தினவிழாவில் திருநங்கைகள் முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய‌ சிறப்பு பரிசை திருநங்கை மாணவி வாங்க மறுத்ததால் அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக விழா மேடையில் இருந்து இறக்கிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினவிழா மற்றும் கேலோ புதுச்சேரி திருவிழா பரிசளிப்பு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்தகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி‌ பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

இதனிடையே புதுச்சேரி அரசின் விளையாட்டு துறை சார்பில் கடந்த வாரம் 5 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து வரும், கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தியா என்ற திருங்கை மாணவி பங்கேற்றுள்ளார். பெண்கள் பிரிவில் பங்கேற்ற இவர் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் பரிசளிப்பு விழாவில் தியாவுக்கு பரிசு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து திருநங்கை தியா விழா மேடையில் முதல்வர் அளித்த சிறப்பு பரிசை வாங்க மறுத்து முதலமைச்சரிடம் முறையிட்டார்.

அப்போது அதிகாரிகள் திருநங்கை மாணவியை விழா மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த திருநங்கை மாணவி தியா மற்றும் சக திருநங்கைகள் பரிசளிப்பு விழா முடிந்து வெளியே வந்த, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சரை முற்றுகையிட்டு முதலிடம் பிடித்த திருநங்கை தியாவுக்கு பாலினத்தை காரணம்காட்டி முதலிடம் பிடித்ததற்கான பரிசு வழங்காமல், சிறப்பு பரிசு மட்டும் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget