EX CM பேரனுடன் காதல் விரைவில் திருமணம்?மனம் திறந்த ஜான்வி கபூர் | Janhvi Kapoor Loves Shikhar Pahariya
ஜான்வி கபூர் நீண்டகால காதலன் ஷிகார் பஹாரியாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் இந்த ஷிகார் பஹாரியா என சமூக வலைதளங்களில் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஶ்ரீதேவியைத் தொடர்ந்து அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி மொழியைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தில் நாயகியாக நடித்து கவனமீர்த்தார். ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜான்வி, தற்போது காதல் வாழ்க்கை காரணமாகவும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஜான்வி, மஹாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியாவை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் காதலன் பெயருடன் கூடிய நெக்லஸை ஜான்வி அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருவரின் காதலை உறுதிபடுத்தியது. சினிமா வட்டாரங்களில், ஜான்வி – ஷிகர் ஜோடி விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து இருவரின் குடும்பங்களிடமோ, ஜான்வி அல்லது ஷிகரிடமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை
ஜான்வி கபூர் இந்தியில் நடித்துள்ள பரம சுந்தரி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் நடித்துள்ள சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் ஜான்வி கபூரின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் " தற்போது நான் திரைப்படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது " என்று பதிலளித்துள்ளார்.