”ரோபோ மனைவி ஆடுனா தப்பா?” கோபமான அறந்தாங்கி நிஷா! SUPPORT-க்கு வந்த எஸ்.வி.சேகர்

Continues below advertisement

தன்னுடைய கணவரோட இறப்புல அந்த பெண் ஆடுனது தப்பா இல்ல ஒரு பெண் ஆடுறதே தப்பா என ரோபோ சங்கரின் மனைவிக்காக சப்போர்ட்டுக்கு வந்துள்ளார் அறந்தாங்கி நிஷா. ரோபோ சங்கர் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் செப்டம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, கண்ணீருடன் நடனமாடி தனது கணவருக்கு பிரியாவிடை கொடுத்தார். துக்கத்தை நடனம் மூலம் வெளிப்படுத்தி ரோபோ சங்கரை வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தில் சிக்கியது. கணவரின் இறுதி ஊர்வலத்தில் இப்படி நடனமாடலாமா என அவருக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டனர்.

இந்தநிலையில் திரைப்பிரபலங்கள் பலர் பிரியங்காவுக்கு சப்போர்ட்டாக பேசி வருகின்றனர். அந்தவகையில் அறந்தாங்கி நிஷா இதுதொடர்பான அவரது பதிவில், ‘ஒருத்தர் தவறிட்டா அவர்பத்தி நல்ல கருத்துக்களை மட்டும் பகிர்ந்து போறதுதான் கணவன் இருப்பில் அந்த பெண் ஆடுனது தவறா? இல்லை ஒருபெண் ஆடினதேதவறா, காதலை எப்படி வேணாலும் வெளிப்படுத்தலாம் ஆனால் வருத்தத்தை அவ இப்படி வெளிப்படுத்தினது எனக்கு தவறா தெரியல காரணம் அவங்க காதலிச்ச மேடையை ஒரு நடன மேடைதான் அந்த இறுதி பயணத்தில் தன் காதலோடு சேர்த்து தன்னுடைய நடனத்தையும் அவருக்காக கொடுத்தது என்ன பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல காதலுக்கு அழகு எப்பவும் உங்களை குண்டு பையன் குண்டு பையன் சொல்லி ரோபோ அவங்க நினைவுகளோட உங்க குடும்பத்துக்காகவு ம்எங்க பிரார்த்தனை இருக்கும்” என தெரிவித்துள்ளார். அவருக்கு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல் எஸ்.வி சேகரும் பிரியங்கா இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை விமர்சிக்கும் அருகதை யாருக்கும் இல்லை என கோபமாக பேசியுள்ளார். அவர் உங்கள் யாருடைய வீட்டில் வந்தும் நடனமாடவில்லை, யாரையும் புண்படுத்தாதீங்க. ரோபோ சங்கரின் இழப்பால் அவர் அடைந்துள்ள வேதனையை யாரும் ஈடுசெய்ய முடியாது. துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருடைய மனோபாவம், அவங்க குடும்ப விஷயம் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola