கோயிலில் நிர்வாணம்.. ஆபாசம் நடுங்கும் பெண் பக்தர்கள்! கோயில் பூசாரியின் விஷம செயல்! | Kovil Priest Atrocities
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானகோயில் உண்டியலில் இருந்து குடும்பத்துடன் காணிக்கையை திருடும் பூசாரிகள், கருவறைக்கு முன்பு ஆடைகளை மாற்றி ஆபாசமாக நடந்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி....
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் புகழ் பெற்ற காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் பூசாரிகளாக மூன்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன் நிலையில் கடந்த சில மாதங்களாக கோயிலில் பணிபுரியும் பூசாரிகள் பகல்,இரவு நேரத்தில் கோயிலின் உள்பகுதியில் அமைந்துள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் இருந்து கத்தியை கொண்டு லாவகமாக குடும்பமாக சேர்ந்து பணம் திருடுவதும்' சில சமயங்களில் உண்டியல் பணம் இல்லாததால் கோபம் கொண்ட பூசாரி உண்டியலில் எச்சில் உமிழ்வதும் போன்ற சம்பவங்கள் அறகேறியுள்ளது. மேலும் கருவறைக்கு முன்பு அருகருக்கத்தக்கவாறு ஆடைகள் மாற்றுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனை அறிந்த சமூக ஆர்வலர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சார்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் சிசிடிவி ஆதாரத்துடன் முதல்வர் தனி பிரிவிற்கும் மற்றும் இந்து அறநிலையத்துறை, குமாரபாளையம் காவல் நிலையத்திற்கும் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தற்போது இந்து அறநிலைத்துறை மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.