ஹர்திக் பாண்டியாவின் புது காதலி மாடல் TO நடிகையார் இந்த மஹீகா சர்மா? | Hardik Pandya Date Mahieka Sharma
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா புதிய காதலி மஹீகா சர்மா என்ற பெண்னை டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. இந்த பெண் குறித்து யார் என பலரும் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா டேட் செய்து வருவதாக கூறப்பட்டது. பின் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது.
இந்தநிலையில் ஹரிதிக் பாண்டியா தற்போது மாடலும் நடிகையுமன மஹீகா சர்மா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை. ஹர்திக் பாண்டியாவின், மஹேகா சர்மா என்கிற பெண்ணும் ஒன்றாக பல இடங்களில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு புகைப்படத்தில் ஹர்திக் பாண்டியா திரும்பி இருந்தார், அவரது ஜெர்சி நம்பர் 33 அதில் தெரிந்தது.
மஹேகாவும், ஹர்திக் பாண்டியாவும் இணையத்தில் ஒருவரை ஒருவர் ஃபாலோவும் செய்து வருகின்றனர். இதற்கான ஸ்க்ரீன் ஷாட்களையும் இணைய வாசிகள் வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியையும், மஹேகா நேரில் கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் சீரியஸாக டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மஹீகா சர்மா, 24 வயதாகும் மாடல் மற்றும் நடிகை ஆவார். டெல்லியில் படித்து வளர்ந்த இவர், பின்பு கேமரா முன் நிற்க வேண்டும் என்கிற ஆர்வத்தால், மாடல் ஆகியிருக்கிறார். 2019ல் ஒரு விவேக் ஓப்ராயுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, அவர் முழுநேர மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டுள்ளார்.மாடலிங் துறையில் Tanishq, Vivo, போன்ற பிரபல பிராண்டுகளுக்கான விளம்பரங்களில் நடித்துள்ளார். பல முன்னணி டிசைனர்களுடன் இணைந்து வேலை செய்துள்ளார். சில இந்தி திரைப்படங்கள், இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார். அவர் யோகா பயிற்சியாளராக இருந்து நடிப்புத் துறைக்கு வந்து சமூக ஊடகங்களில் பிரபலமானவர். ஹர்திக் பாண்டியாவிற்கு 31 வயது, அவரை டேட்டிங் செய்வதாக கூறப்படும் மஹேகாவின் வயது 24. இவர்களுக்குள் 7 வயது வித்தியாசம் இருக்கிறது. இது குறித்தும் ரசிகர்கள் பெரிதாக பேசி வருகின்றனர்.