ரஜினி கமல் COMBO DIRECTOR?RACE-ல் OUT ஆன லோகேஷ் லிஸ்டில் புதிய இயக்குநர்!

ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும்மல்லாமல் இந்த வாய்ப்பை லோகேஷ் கனகராஜிடம் இருந்து பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருப்பதோடு, இரண்டு உச்சநட்சத்திரங்கள் எப்படி நண்பர்களாக செயல்பட வேண்டும் என்பதற்கும் உதாரணமாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இருவரின் பாதைகளும் வெவ்வேறு இலக்குகளை நோக்கி பிரிய, தில்லு முல்லி படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தான், 44 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட போதே, ரஜினி மற்றும் கமல் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆரம்பத்தில் இது வெறும் வதந்தி என கூறப்பட்டாலும், இணைந்து நடிக்கவிருப்பதை தற்போது ரஜினி மற்றும் கமலே உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், இயக்குனர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ரஜினி தெரிவித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படத்தை லோகேஷ் தான் இயக்க திட்டமிடப்பட்டதாகவும், கூலி படம் எதிர்கொண்ட மோசமான விமர்சனங்களால், இயக்குனரை உறுதி செய்வதில் தயக்கம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை ரஜினி மற்றும் கமல் இணையும் படத்தை, இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கையை விட்டு முழுமையாக நழுவவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் 2 ஹிட் அடித்தால், ரஜினி மற்றும் கமல் இணையும் புதிய படத்தினை நெல்சன் கூட இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவானது, ஜெயிலர் 2 படத்திற்கான வரவேற்பை பொறுத்து மாறக்கூடும் என தெரிகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola