சிம்புவுக்கு பாட்டு எழுதினத பத்தி அஜித் சொன்ன COMMENT - Director perarasu
'' யாராவது ஒரு இயக்குநர் கிடைச்ச போதுனு நினைச்சப்போதான் விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைச்சது. எதிர்பாராத நேரத்துலயே விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ எதிர்பார்த்துட்டு இருக்குறப்போ கண்டிப்பா படம் டைரக்ஷன் பண்ணுவேன்னு நம்புறேன். வருஷம் வருஷம் என்னோட பொண்ணு பிறந்தநாளைக்கு விஜய் சார் மீட் பண்ணுவேன். இப்போ, விஜய் சார் வெச்சு படம் பண்ற எல்லாரையும் கவனிச்சிட்டு இருக்கேன். நான் டைரக்ஷன் பண்றப்போ இதைவிட நல்ல ஸ்க்ரிப்ட்தான் கண்டிப்பா பண்ணுவேன். இப்போ வர்ற இயக்குநர்கள் இன்னும் தங்களுடைய பெயரை திரையில பதிவு செய்யணும்னு நினைக்குறேன். ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்ராஜ் டைரக்ஷன்லாம் பிடிச்சிருக்கு. ''





















