சட்டை இல்லாமல் ATROCITY தட்டிக்கேட்ட கனி தகாத முறையில் பேசிய திவாகர் | Big Boss 9 issue
எஃப் ஜே வை கட்டிபிடித்ததை வைத்து கனியை தகாத முறையில் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர் பேசியது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய பிக்பாஸ் சீசன்களைக் காட்டிலும் இந்த பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் சகிக்க முடியாத காரியங்களை பிக்பாஸ் வீட்டில் அரங்கேற்றி வருகிறார்கள்.
முந்தைய சீசன்களில் போட்டியாளர்களிடையே சண்டைகள் நடந்தாலும் இந்த சீசனில் அடிப்படை நாகரிகத்தை கூட பின்பற்றாமல் போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்துகொள்கிறார்கள். அந்தரங்க உரையாடலை பொதுவில் பேசுவது , ஆபசமாக திட்டிக்கொள்வது , அடிக்க கை ஓங்குவது என பார்ப்போருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விதமாக அன்றாடம் பல நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகின்றன. அந்த வகையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் பேசியுள்ளது அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.
வெளியே ரீல்ஸில் நடித்து உயிரை வாங்கியது போதாது என பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர். உள்ளே சென்ற நாள் முதல் நடிக்கிறேன் என போட்டியாளர்களை பலிகொடுத்து கொண்டிருக்கிறார். ஒரு சில இடங்களில் அவரது இயல்பை பார்வையாளர்கள் ரசிக்கவே செய்தாலும் அடிப்படையில் அவரது கருத்துக்களில் ஒரு மேட்டிமை தனம் இருப்பதை நாம் கவனிக்கலாம். யார் சொல்வதையும் கேட்பதில்லை, யாரையும் பேச விடுவதில்லை , தான் சொல்வது மட்டுமே சரி என்று நம்பிக்கொண்டிருக்கும் அவருடன் அந்த வீட்டில் இருப்பது என்பது பலருக்கு ஒரு கொடும்கனவு.
நடிக்கிறேன் என்று சட்டையைக் கழற்றிபோட்டு சுற்றிக்கொண்டிருந்த திவாகரிடம் கனி சட்டையை போட்டு நடிங்க என்று சொல்லிவிட்டார். அதற்கு உடனே தன்னை நியாயப்படுத்த தொடங்கினார். நான் உங்களை நடிக்க வேண்டாம் என்றே சொல்லவில்லை நீங்கள் சட்டையில்லாமல் இருப்பது எனக்கு அசெளகரியமாக இருக்கிறது அதனால் சட்டையை மாட்டிக்கொள்ளுங்கள் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்தாக தான் சொன்னேன். அதை கேட்பது கேட்காதது உங்களுடைய விருப்பம் என்று கனி பொறுமையாக திவாகருக்கு விளக்கினார். அதற்கு திவாகர் " நீங்க கூட தான் எஃப் ஜே வை கட்டிபிடித்து பேசுனீங்க அது எனக்கு நாகரிகமா இல்ல என்று பேச சுற்றி இருந்தவர்கள் அவர்மேல் பாய்ந்தனர். கனி அழுதபடி அங்கிருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான கனியை அவரது வயதை ஒத்த எஃப் ஜேயுடன் தொடர்புபடுத்தி தகாத முறையில் பேசிய திவாகரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.





















