Lok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்
தான் வளர்த்த கிடா தன்னுடைய மார்பிலேயே பாய்ந்தது போல் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ex அதிமுகவினரே, சில தொகுதிகளில் அதிமுகவினரை இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி அதிமுகவை கலங்க வைத்துள்ளனர்.
தமிழகம், புதுவை உட்பட 40/40 தொகுதிகளில் தோல்வி அடைவோம் என எடப்பாடி உட்பட அதிமுக தொண்டர்கள் யாருமே எதிர்ப்பார்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது நடந்தது மட்டுமின்றி, அதோடு சேர்த்து 10 தொகுதிகளில் 3வது இடம், 7 தொகுதிகளில் டெபாசிட் காலி என.. அடிமேல் அடி வாங்கியுள்ளது அதிமுக. உண்மையிலேயே என்ன பதில் சொல்வது இந்த தோல்விக்கு என்று பதில் தெரியாமல் அதிமுக கேம்பில் சீனியர் தலைவர்கள் திணறி வருகின்றனர்.
இதில் குறிப்பாக நாம் பார்க்க வேண்டியது, அதிமுக பிரிந்து நின்று, தேர்தலை சந்திப்பது அவர்களை பலவீனப்படுத்தியுள்ளதா இல்லையா என்பதை தான். அதற்கு பதில் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது ஓ.பி.எஸ், டிடிவி, தங்க தமிழ்செல்வன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெற்றிருக்கும் வாக்குகள்.
எடப்பாடி பழனிசாமியின் கணக்கோ, இரட்டை இலையும், அதிமுக என்ற கட்சியும் தம்மிடம் தான் இருக்கிறது, அதனால் அதிமுக பலவீனமடையவில்லை என நம்புகிறார்.
ஆனால் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தால், அது வேறு மாதிரியாக இருக்கிறது. 28 ஆண்டுகளாக திமுக கால்பதிக்க முடியாத அதிமுகவின் கோட்டையாக இருந்தது தேனி மக்களவை தொகுதி. ஆனால் முதல் முறையாக அங்கே திமுகவின் கொடி பறக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி வேறும் 1.55 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இங்கே அதிமுகவின் வாக்கு வங்கியை, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ex அதிமுகவினரே பதம் பார்த்துள்ளனர். அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட தங்கதமிழ்செல்வன் திமுகவின் உதவியோடு 5.71 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். அதே நேரம் டிடிவி தினகரனோ 2.92 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். சொல்லப்போனால் இவர்களின் வாக்கு சதவீததிற்கு பக்கத்தில் கூட அதிமுகவால் வரவில்லை.
அதே போன்று அதிமுகவிலிருந்து பிரிந்து பல காலம் முன்பே நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்துவிட்டாலும், தற்போதும் நெல்லையின் பல்வேறு இடங்களில் நயினார் நாகேந்திரன் அதிமுகவின் நபராகவே மக்களின் மனங்கள் பதிந்துள்ளார். ஆனால் நெல்லையில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய அவர், அதிமுகவின் வாக்குகளை ஹெவியாக அடித்து நொறுக்கியுள்ளார். 1 லட்சம் வாக்குகளை கூட நெல்லையில் வாங்க முடியாத அதிமுக, நாம் தமிழர் கட்சியுடன் கஷ்டப்பட்டு போராடி ஜஸ்ட் மிஸ்ஸில் 4வது இடத்துக்கு செல்லும் அவல நிலையை தவிர்த்துள்ளது.
சரி இவர்கள் அனைவருக்காவது, கட்சி, சின்னம் ஆகியவை இருந்தன.. ஆனால் சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரத்தில் பழாப்பழத்தை தூக்கிக்கொண்டு சுத்திய ஓபிஎஸ்ஸும் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டார். இங்கேயும் ஒபிஎஸ் பக்கத்தில் கூட நெருங்க முடியாத அதிமுக வேட்பாளர் 1 லட்சம் வாக்குகளை கூட பெற முடியாமல், வெறும் 2000 வாக்குகள் வித்யாசத்தில் நாம் தமிழர் கட்சியை 4வது இடத்துக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால், அதிமுக என்ற பெயரும், கட்சி சின்னத்தை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றி என்பதை யோசித்துக்கூட பார்க்க முடியாது. குறைந்தபட்சம் திமுகவிற்கு சவால் விட வேண்டும் என்றாலே, அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே முடியும் என்று தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.
2014ல் கூட்டணியே இன்றி, 37 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த அதிமுக, 2019ல் கூட்டணி பலத்துடம் 35 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் திடிரென தற்போதைய தேர்தலில் கிட்ட தட்ட 15 சதவீதம் அளவிலான வாக்குகளை இழந்துள்ள அதிமுகவின் வாக்கு வங்கி வெறும் 20.46 சதவீதமாக சுறுங்கியுள்ளது.
தொடர்ந்து அதிமுகவின் கிராப் கிழே சென்றுகொண்டிருக்க, அதை தடுத்து நிறுத்த மீண்டும் பாஜக பக்கம் சாயலாம் என நினைக்கிறது அதிமுக.
அதன் வெளிபாடே, அண்ணாமலை தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம், அவர் மட்டும் அப்படி பேசாமல் இருந்து இருந்தால் என மீண்டும் பழைய ரூட்டை எடுக்க தொடங்கியுள்ளது அதிமுக. ஆனால் இது எந்த அளவிற்கு அதிமுகவிற்கு கைகொடுக்கும், அதிமுக தொண்டர்கள் இதனால் உற்சாகமடைவார்களா என்பது கேள்விகுறியே.