மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மார்ச் மாதம் ரயில்களில் நேர மாற்றம்: தாமதமாகும் ரயில்கள் விவரம்!

மார்ச் மாதத்தில் பல்வேறு முக்கிய ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில், ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் மாதத்தில் தமிழகம் வழியாக இயங்கும் பல்வேறு முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரங்களில் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரயில் பாதையின் ஒரு பகுதியை மூடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்தில் பல்வேறு முக்கிய ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக சென்றடையும்.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மார்ச் மாதம் ரயில்களில் நேர மாற்றம்: தாமதமாகும் ரயில்கள் விவரம்!

அதன்படி, மார்ச் 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் பாட்னா டூ எர்ணாகுளம் SUPER FAST எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22644) 50 நிமிடங்களும், மார்ச் 13-ம் தேதி மதியம் 3.50-க்கு புறப்படும் நரசாபூர் - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 07153) 45 நிமிடங்களும் தாமதமாக இயங்கும். மார்ச் 11 அன்று இரவு 7.35 மணிக்கு புறப்படும் திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22504) 40 நிமிடங்கள் தாமதமாகும்.

குறிப்பாக, மார்ச் 28-ம் தேதி புறப்படும் லால் குவான் - KSR பெங்களூரு பூஜா ஸ்பெஷல் (வண்டி எண்: 05074) 3 மணி நேரம் 20 நிமிடங்களும், அதே நாளில் புறப்படும் தானாப்பூர் - SMVT பெங்களூரு சங்கமித்ரா SUPER FAST  எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12296) 2 மணி நேரம் 10 நிமிடங்களும் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா - சென்னை சென்ட்ரல் ரயில் (வண்டி எண்: 12839) மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 1 மணி நேரம் 5 நிமிடங்களும், மார்ச் 7-ம் தேதி 1 மணி நேரம் 15 நிமிடங்களும் தாமதமாக வந்து சேரும்.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! மார்ச் மாதம் ரயில்களில் நேர மாற்றம்: தாமதமாகும் ரயில்கள் விவரம்!

மேலும், மார்ச் 5-ம் தேதி புறப்படும் பாட்னா - எர்ணாகுளம் SUPER FAST எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்களும், மார்ச் 5 மற்றும் 7-ம் தேதிகளில் புறப்படும் புதுடெல்லி - சென்னை சென்ட்ரல் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12616) 15 நிமிடங்களும் காலதாமதமாகும். மார்ச் 6-ம் தேதி புறப்படும் நியூ தின்சுகியா - எஸ்.எம்.வி.டி பெங்களூரு SUPER FAST  எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22502) 60 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.

தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்களைப் பொறுத்தவரை, மார்ச் 26-ம் தேதி சென்னை எக்மோர் - மதுரை வைகை SUPER FAST எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635) 60 நிமிடங்களும், மார்ச் 28-ம் தேதி 1 மணி நேரம் 10 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும். புதுச்சேரி - காக்கிநாடா போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17656) மார்ச் 26 மற்றும் 28-ம் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகும். இதுதவிர, இந்தூர் - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் (மார்ச் 9) 50 நிமிடங்களும், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (மார்ச் 7 மற்றும் 14) 35 நிமிடங்களும், SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு ஸ்பெஷல் (மார்ச் 18) 1 மணி நேரம் 15 நிமிடங்களும், KSR பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (மார்ச் 25) 30 நிமிடங்களும் தாமதமாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget