Mamandur Forest : சென்னையில் அருகே பட்ஜெட் டிரிப்.. தரமான ட்ரக்கிங் ஸ்பாட்.. குட்டி அந்தமான்..!
Mamandur forest Eco Tourism "சென்னையில் இருந்து பட்ஜெட் ட்ரிப் செல்ல விரும்புபவர்கள், சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் உள்ள மாமண்டூர் காடுகளுக்கு சென்று வரலாம்"

Mamandur Forest Trekking : "குழந்தைகளுடன் பாதுகாப்பாக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு, மாமண்டூர் காடுகள் ஏற்ற இடமாக உள்ளது"
சென்னை அருகே இப்படி ஒரு இடமா ?
சென்னையில் இருப்பவர்களுக்கு நகர வாழ்க்கையில் இருந்து, ஒரு நாளாவது விடுமுறை கொடுத்து இயற்கை கொஞ்சும் இடங்களுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை இல்லாமலா இருக்கும். சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வேண்டும் என நினைத்தாலே, அதிகளவு செலவு பிடிக்கும், குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியுமா என பல்வேறு கேள்விகள் எழாமல் இருக்காது.
காடுகள் அல்லது மலைகள் சூழ்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே, அதிகளவு பட்ஜெட் போட வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து, மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே, அதிக தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஆனால் சென்னையில் இருந்து மூன்று மணி நேர தூரத்தில், ஒரு நாள் ட்ரிப் சென்று வருவதற்கு ஏற்ற இடமாக மாமண்டூர் காடுகள் உள்ளன.
சென்னை அருகே குட்டி அந்தமான்
அந்தமான் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, தெளிந்த நீர், இயற்கை கொஞ்சம் பசுமை காடுகள் தான். இவற்றை சென்னை அருகே பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டியது மாமன்று காடுகளுக்கு தான். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் மூங்கில் காடுகள், அரிய மரங்களுக்கு நடுவே பச்சை நிற தெளிந்த நீர் பார்ப்பதற்கே இயற்கை அன்னையின் கலை படைப்பு போல் காட்சியளிக்கும்.
ஆந்திரப் பிரதேச மாநில வனத்துறையினர் கட்டுப்பாட்டில் மாமண்டூர் காடுகள் உள்ளன. இந்த இடத்தில் குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆந்திர வனத்துறையினர் பல்வேறு பேக்கேஜ்கள் வைத்துள்ளனர். ட்ரெக்கிங், கேம்பிங், பாரஸ்ட் சஃபாரி, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கின்றன. குழந்தைகளுடன் சென்றால் விளையாடுவதற்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எளிதில் பார்க்கக் கிடைக்காத பல்வேறு அரிய காட்சிகள் அங்கு நிறைந்திருக்கின்றன.
மாமண்டூர் காடுகள் எங்கே அமைந்துள்ளன?
இந்த அழகிய மாமண்டூர் காடுகள், சென்னை கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. கடப்பா பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதிக்கு சென்று விட்டு இந்த இடத்திற்கு வரலாம். அவ்வாறு வரும்போது வரும் வழியும் முழுவதும் அழகிய காட்டுப்பகுதி ரசித்தவாறு வரலாம்.
நுழைவு கட்டணம் மற்றும் போக்குவரத்து எப்படி?
இந்த பகுதிக்கு நேரடியாக பொழுது போக்குவரத்து மூலம் செல்வது அவ்வளவு எளிது கிடையாது. இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு சொந்த கார் மூலம் வருவது சிறந்தது. அல்லது திருப்பதியில் இருந்து, கேப் அல்லது வேன் மூலமாகவும் வரலாம்.
நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கார் பார்க் செய்ய 20 ரூபாய், வேன்களுக்கு 30 ரூபாய் மற்றும் பைக்குக்கு பத்து ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அழகு
ஒரு சில இடங்களுக்கு ஒருமுறை சென்று விட்ட பிறகு, அடுத்த முறை செல்லும் பொழுது அதன் மீது இருக்கும் ஆவல் சற்று குறையும். ஆனால் இந்தப் பகுதிக்கு ஒருமுறை சென்று விட்டால், அடுத்த முறை எப்போது செல்வோம் என்ற எண்ணத்தை வரவைக்கும் அளவுக்கு கொள்ளை அழகு கொண்ட இடமாக இது. இந்த சம்மர் வெக்கேஷன்க்கு ப்ளான் பண்றீங்கன்னா கண்டிப்பா இந்த இடத்தையும் ஒரு ஆப்ஷன்ல வச்சுக்கோங்க.




















