மேலும் அறிய

Whatsapp New Feature: வாட்ஸட்டில் ஓட்டு அப்டேட்.. டாக்குமெண்ட் அப்டேட்.. வரிசையாக வரும் அதிரடி

மெட்டா குழுமம் வாட்ஸ் - அப் பயனாளர்களுக்கு போல் உருவாக்குவதிலும் மற்றும் டாகுமெண்ட் அனுப்புவதிலும், புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா குழுமம் வாட்ஸ் - அப் பயனாளர்களுக்கு  போல் உருவாக்குவதிலும் மற்றும் டாகுமெண்ட் அனுப்புவதிலும், புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாட்ஸ் - அப் செயலி:

எளிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, மாதத்திற்கு 224 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம்  குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின்  மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.  

அடுத்தடுத்து வரும் அப்டேட்:

மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் பயனார்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அப்டேட்களை,  வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் போல் உருவாக்குவது மற்றும் டாகுமெண்டை அனுப்புவதில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. 

ஒரு ஆளுக்கு ஒரு வோட்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப் செயலியில் போலிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்-அப் குழுவில் உருவாக்கப்படும் போலிங்கில் ஒருவரால்; ஒருமுறை மட்டுமே வாக்களிக்கும் வகையில், போலிங் கிரியேட்டரால் இனி மாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச் வசதி:

குறுந்தகவல்களை போன்று இனி போல்ஸ்களையும் பயனாளர் தேடி கண்டுபிடிக்கலாம்.  வழக்கமான சர்ச் ஆப்ஷனை போன்றே சாட் ஸ்கிரீனில் தேடுவதோடு, அதன் முழு விவரங்களையும் அறியலாம்.

போலிங்கை கண்காணிக்கலாம்:

புதிய அப்டேட்டின் மூலம், தான் உருவாக்கிய போலிங்கிற்கு ஏதேனும் வாக்குகள் கிடைத்தால் அதனை பயனாளர் உடனடியாக அறிய நோட்டிபிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

டாகுமெண்ட்களுக்கு கேப்ஷன்:

ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யவும் புதிய அப்டேட்டில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறப்பம்சமாக டாகுமெண்ட்களை பகிரும்போது இனி கேப்ஷனை சேர்க்க முடியும். இதன்படி, செய்திதாள்கள், வர்க் டாகுமெண்ட்ஸ் ஆகியவற்ரை பகிரும்போதும் இனி கேப்ஷனை சேர்க்கலாம். இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

”கூகுள் டிரைவ் தேவைப்படாது”

தற்போது வரை கூகுள் டிரைவில் பேக்-அப் எடுப்பதன் மூலமே, ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு சாட்-ஹிஸ்டரி தரவுகள் மாற்றிக்கொள்ளப்படுகிறது. ஆனால், விரைவில் ஒற்றை க்யூஆர் கோட் மூலம் மொத்த சாட்-ஹிஸ்டரி தரவுகளையும் ஒரு போனிலிருந்து வேறொரு போனிற்கு மாற்றிக்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget