மேலும் அறிய

NASA | விண்வெளியில கடலும் இருக்கு ! கோட்டையும் இருக்கு ! - NASA வெளியிட்ட பிரமிக்கவைக்கும் புகைப்படங்கள்!

இந்த புகைப்படங்களை பகிர்ந்த நாசா , Cosmic Reef விண்வெளியின் அழகையும் மர்மத்தையும் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது

உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. விண்வெளியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சிகப்பு மற்றும் ஊதா நிறங்களில் கண்களை கவரும் அட்டகாசமான பிரதிபலிப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கு கடலை நினைவுப்படுத்துவதாக இருப்பதால் இதற்கு  Cosmic Reef அதாவது விண்வெளியில் உள்ள கடல் பாறை என பெயர் வைத்திருக்கிறது நாசா. நீருக்கு அடியில் எப்படி வண்ண வண்ண கற்கள் , பாறைகள் போன்றவை காணப்படுமோ அதே போல தோற்றமளிப்பதால்தான் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல நட்சத்திரங்கள் இணைந்து உருவான மாகெல்லானிக் கிளவுட் என குறிப்பிட்ட நாசா இதனை பால்வீதியின் செயற்கைகோள் விண்மீன் என தெரிவிக்கிறது. இது விண்வெளியிலிருந்து 160,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

View this post on Instagram
 
A post shared by NASA (@nasa)

இதில் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நெபுலா கடந்த 2014 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . இதனை NGC 2014 என அழைக்கின்றனர். இதில் பிரகாசிக்கும் மையப்பகுதி கனமான நட்சத்திரங்களின் தொகுப்பு என குறிப்பிட்ட நாசா , ஒவ்வொன்றும் சூரியனைவிட 10 முதல் 20 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளது.அதே போல ஊதா நிறத்தில் உள்ள நெபுலா கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை NGC 2020 என அழைக்கின்றனர்.இது ஒரு தனி மாமத் நட்சத்திரத்தால் உருவாக்கப்பட்டது மேலும் சூரியனை விட 200,000 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டது என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த புகைப்படங்களை பகிந்த நாசா , Cosmic Reef விண்வெளியின் அழகையும் மர்மத்தையும் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.30ஆண்டுகளுக்கும் மேலான சேவையை கொண்டாடும் வகையில் , நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Hubble Space Telescope (@nasahubble)

 அதே போல காஸ்மிக் கோட்டை என்ற மற்றொரு புகைப்படத்தையும் ஹப்பிள் புகைப்படம் எடுத்துள்ளது.மூன்று-ஒளி ஆண்டு உயரமான இந்த சிகரம் 2010 இல் எடுக்கப்பட்டது. தூசி மற்றும் வாயுவால் ஆனது இந்த கோட்டை. நெபுலாவின் இந்த கொந்தளிப்பான பகுதி தீவிர நட்சத்திரத்தை உருவாக்கும் செயல்பாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறது என்கிறது நாசா. மில்லியன் கணக்கான கண்கவர் படங்களுடன் உலகின் கற்பனையைப் படம்பிடித்த பெருமை நாசா ஹப்பிளையே சேரும். யாரும் அறியாத பல அதிசயங்களை புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்பும் நாசா ஹப்பிள் ‘விண்வெளியின் கண்’ என்றாலும் மிகையில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
Embed widget