மேலும் அறிய

Whatsapp new feature: இனி ஃபோட்டோவில் இருந்தும் டெக்ஸ்டை காபி செய்யலாம்.. வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்

வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தும் ஆப்பிள் பயனாளர்களுக்கு என பிரத்யேகமான, புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தும் ஆப்பிள் பயனாளர்களுக்கு என பிரத்யேகமான, புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ஐஓஎஸ் பயனாளர்கள் இனி புகைப்படங்களில் உள்ள டெக்ஸ்டை கூட காபி செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்த உள்ளது.

வாட்ஸ்-அப் செயலி:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில் அடுத்தடுத்து வழங்கப்படும் அப்டேட்களை கண்டு பயனாளர்கள் சளைத்தே போனாலும், விடாமல் தொடர்ந்து அப்டேட்கள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அந்த வரிசையில் தான் ஆப்பிள் பயனாளர்களுக்கு என ஒரு புதிய பிரத்யேக அப்டேட் வாட்ஸ்-அப் செயலியில் வழங்கப்பட உள்ளது.

புதிய அப்டேட் என்ன?

அதன்படி, ஐபோன் பயனாளர்கள் தங்களது செல்போனில் எடுக்கும் புகைப்படங்களில் உள்ள டெக்ஸ்டை மட்டும் தனியாக காபி செய்து எடுத்து பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் ஐபோன்களில் இந்த அம்சம் ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் நிலையில், v23.5.77 வெர்ஷன் வாட்ஸ்-அப் செயலியை கொண்ட அனைத்து ஐபோன்களிலும் இனி இந்த புதிய அம்சம் வழங்கப்பட உள்ளது.

புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

டெக்ஸ்ட் அடங்கிய புகைப்படத்தை திறக்கும்போது, அதன்மீது புதிய பட்டன் ஒன்று தோன்றும். அதனை கிளிக் செய்தால் அந்த புகைப்படத்தில் உள்ள டெக்ஸ்டை காபி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம், பதுகாப்பு காரணங்களால்   view once image-களில் புதிய வசதியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்:

அண்மையில் தான் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பிக்சர் - இன் பிக்சர் மோட் ஆப்ஷன் வழங்கப்பட்டது.  அதோடு, ஃபோட்டோக்களை ஸ்டிக்கர்களாக மாற்றுவது,  வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸாக வைப்பது போன்ற அப்டேட்களும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது.

குரூப்சாட்டில் புதிய வசதி

இதனிடையே, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இருதரப்பு பயனாளர்களுக்கும் குரூப் சாட்டில் புதிய வசதி ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, வாட்ஸ்-அப் குழுவில் தெரியாத (கான்டெக்ட் லிஸ்டில் (unknown contacts) இல்லாத நபர் மெசேஜ்) நபர் குறுந்தகவல் அனுப்பினால்,  தொடர்பு எண்ணிற்கு பதிலாக ‘ பயனர் பெயர்’ டிஸ்ப்ளே செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.  WaBetaInfo வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ”ஆண்ட்ராய்டு 2.23.5.12 அப்டேட்டில் வாட்ஸ்-அப் குழு உரையாடலில் தெரியாத நபரிடமிருந்து மெசேஜ் வரும்போது மொபைல் எண்களுக்கு பதிலாக, பயனரின் பெயர் (Username) தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Coimbatore Pump Industry: ‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!
நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
33 கிமீ மைலேஜ், 5 ஸ்டார் பாதுகாப்பு, மலிவு விலை.! விற்பனையில் சக்கைபோடு போடும் அந்த கார் எது.?
33 கிமீ மைலேஜ், 5 ஸ்டார் பாதுகாப்பு, மலிவு விலை.! விற்பனையில் சக்கைபோடு போடும் அந்த கார் எது.?
Embed widget