AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவுசெய்த கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..
பழனி மலையின் தெற்கு முனையில் உள்ள கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவு செய்ததுள்ளது.
சூரியன் ஆற்றலுடன் ஒளிர்கிறது மேலும் புற ஊதா கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுவதால் அதை நேரடியாகப் பார்ப்பது என்பது நல்ல யோசனை இல்லை. ஆனால் சோலார் ஃபில்டர் இருந்தால், நீங்கள் சூரியனைப் பார்க்கலாம் மற்றும் சூரியனின் மேற்பரப்பில் நகரும் ஒரு பிரம்மாண்டமான சூரிய புள்ளியை நீங்கள் காணலாம். பழனி மலையின் தெற்கு முனையில் உள்ள கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவு செய்துள்ளது.
What is all this about a sunspot, you ask? There is a gigantic sunspot #AR3190 on the surface of the Sun this week.
— IIAstrophysics (@IIABengaluru) January 20, 2023
These are images taken with a 40 cm telescope at our Kodaikanal Solar Observatory on 17 and 19 Jan. Which one is AR3190 and why has it moved?@asipoec @IndiaDST pic.twitter.com/1uLyiVMLFX
நாசாவின் கூற்றுப்படி, சூரிய புள்ளிகள் என்பது சூரியனின் மேற்பரப்பில் கருமையாக தோன்றும் பகுதிகளாகும். மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட வாயுக்கள் சக்திவாய்ந்த காந்த சக்திகளின் பகுதிகளை உருவாக்குகின்றன. "சூரியனின் வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இயக்கம் சூரியனின் மேற்பரப்பில் நிறைய செயல்பாடுகளை உருவாக்குகிறது, இது சூரிய செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது," என்று நாசா கூறுகிறது.
சூரிய புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பை விட இருட்டாக இருக்கும், ஏனெனில் அவை சூரிய மேற்பரப்பின் மற்ற பகுதிகளை விட தட்பவெப்பம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் சூரியன் அதன் 11 ஆண்டு சுழற்சியை நோக்கி செல்வதாகவும், இந்த சுழற்சி 2025 இல் உச்சத்தை எட்டும் எனவும் கூறப்படுகிறது. கொடைக்கானல் ஆய்வகம் ஜனவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருக்கும் சூரிய புள்ளிகளைப் படம்பிடித்தது. பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் 40 செ.மீ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த நிகழ்வைக் கண்டனர்.
தேசிய அளவில் பெரிய சூரிய தொலைநோக்கியின் தளமான லடாக்கில் உள்ள மெராக்கிலிருந்தும் இது போன்ற சூரிய புள்ளிகளும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையும், சூரிய புள்ளிகளின் அளவும் பதினொரு வருட சுழற்சியை குறிப்பிடுவதாகவும், நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தற்போதைய சுழற்சியில் AR3190 பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய சூரிய புள்ளியாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.