"இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யு 2 சீரிஸ்" - ஆரம்ப விலை என்ன தெரியுமா.?
பிரபல பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் ‛2 சீரிஸ்’ கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.
![Test Drive starts for BMW 200i Sport in india](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/26/5072c862eec2b94f578034365ae0da9b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பி.எம்.டபிள்யு 220ஐ ஸ்போர்ட் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யு தொழிற்குடத்தில் உருவான கார் என்று கூறப்படுகிறது. 190 குதிரைத்திறனுடன் நேர்த்தியான உடலமைப்பை இந்த வாகனம் பெற்றுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரை தொடக்க விலையாக 37 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்களுக்கான புக்கிங் மற்றும் டெஸ்ட் டிரைவ் சேவைகளும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.எம்.டபிள்யு கார்களில் அதிகம் காணப்படும் பனோரமா சன்ரூப், நேர்த்தியான கூபே டிசைன் மற்றும் ரிவெர்ஸ் பார்க்கிங் அசிஸ்டன்ட் வசதிகளுடன் இந்த வாகனம் வெளியாகி உள்ளது. தொடுதிரை வசதிகொண்ட கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்போர்ட் சீட்கள், இடத்திற்கு தன்குந்தார்போல லைட்டின் மற்றும் வசதி என்று பல அம்சங்கள் உள்ளது.

For those who demand style and power with every ride.
The all new BMW 2 Series Gran Coupé 220i Sport comes with Illuminated Door Trims and Launch Control.#The2 #2Irresistible #BMW2Series
Click the link below to book a test drive today:https://t.co/dmJA5eBXYk pic.twitter.com/usFLk9mwrT
— bmwindia (@bmwindia) March 25, 2021

இந்திய சந்தையில் விலை குறைந்த ஆடம்பர கார் விற்பனையில் பி.எம்.டபிள்யு நிறுவனம் அண்மையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. பி.எம்.டபிள்யு 2,3 மற்றும் 5 சீரிஸ் கார்களுக்கு தற்போது இந்திய சந்தையில் பெரிய வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)