மேலும் அறிய

Whatsapp Mobile Recharge: இனி ஜிபே, போன் பே வேண்டாம்.. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ்.. வந்தாச்சு புது வசதி!

வாட்ஸ்அப் செயலியை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து பல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் களத்தில் இறக்கியது. தற்போது வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ரீசார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மக்கள் இனி தங்கள் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ்களை நேரடியாக வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் பல்லாயிரக்காண கோடி உள்ளது. இதனால் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதுபுது வசதிகளை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதில் வாட்ஸ்அப் செயலியை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து ஸ்டிக்கர், வாய்ஸ் ரெக்கார்ட், போன், வீடியோ கால் வசதி என பல அப்டேட்டுகளை களத்தில் இறக்கியது. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக யுபிஐ சேவை கொண்டு வரப்பட்டது. இதில் குறிப்பிட்ட தொகையை வாட்ஸ்அப் சர்வர் மூலம் அனுப்ப முடியும். 

இந்த நிலையில் அடுத்ததாக வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ரீசார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மாதாந்திர அல்லது சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்த கூகுள் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே நேரடியாகத் தங்கள் மொபைல் ரீசார்ஜ்களைச் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான திட்டங்களையும் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புது வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்குப் படிப்படியாக வெளியிடப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு நிறுவனமா PayU உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் பகுதியைக் கண்டறிந்து இதனை பயன்படுத்தும் நோக்கில், முகப்புத் திரையில் ரூபாய்  சின்னத்தையும் ₹ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரீசார்ஜ்களை நேரடியாக வாட்ஸ்அப்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் பயனாளர்கள் செயலிகளுக்கு இடையில் மாறி மாறிச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பயனாளர்கள் இணைவதை உறுதி செய்யும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பயனர்கள் ஏற்கனவே தங்கள் நேரத்தைச் செலவிடும் தளங்களில் முன்னணி இடத்தை வாட்ஸ்அப் பெற்றிருக்கிறது. மொபைல் ரீசார்ஜ்கள் ஒரு வழக்கமான டிஜிட்டல் பரிவர்த்தனை என்பதால் இதனை கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருப்பதாக மெட்டா இந்தியாவின் வணிகச் செய்திப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் தெரிவித்துள்ளார். 

எப்படி வாட்ஸ்அப்பில் ரீசார்ஜ் செய்யலாம்?

ரூபாய் சின்னமான ₹ என்பதை அழுத்தவும். அதில் மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யவும். அதில் காட்டப்படும் ஆப்ஷன்களில் தேவையானதை கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை கொடுத்து தொலைதொடர்பு ஆபரேட்டரை தேர்வு செய்யவும். இதனைத் தொடர்ந்து உங்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யவும். கட்டணத்தை யுபிஐ செயலி மூலம் செலுத்தவும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

அடடே... மனிதர்களுக்குன்னு தனியா 'பிரிட்ஜ்'-ஆ? ஜப்பான்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!
அடடே... மனிதர்களுக்குன்னு தனியா 'பிரிட்ஜ்'-ஆ? ஜப்பான்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
ரூ. 60 ஆயிரத்தில் லைகா கேமரா! சந்தையைக் கலக்க வரும் புது ஷாவ்மி போன் – கேமரா பிரியர்களுக்கு செம ட்ரீட்!
60 ஆயிரத்தில் லைகா கேமரா! சந்தையைக் கலக்க வரும் புது ஷாவ்மி போன் – கேமரா பிரியர்களுக்கு ட்ரீட்!
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Embed widget