மேலும் அறிய

Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை

மடிக்கக்கூடிய தொலைபேசி பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சாம்சங், தற்போது புதிய அம்சங்களை பரிசோதனை செய்து வருகிறது. சுருட்டி வைக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கான காப்புரிமைகளை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

மடிக்கக்கூடிய தொலைபேசி பிரிவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய சாம்சங் நிறுவனம், இப்போது புதிய தொழில்நுட்பங்களுடன் கூட போன்களை வடிவமைப்பதற்கான பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. ஸ்லைடிங் டிஸ்ப்ளே மற்றும் உருளவும் கூடிய ஒரு டிஸ்ப்ளே கொண்ட ஒரு தொலைபேசியை வடிவமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, இந்த புதிய வடிவமைப்பு குறித்த சாம்சங்கின் பரிசோதனைகள் குறித்து எடுத்துக் காட்டுகிறது. எதிர்காலத்தில் சாம்சங் என்ன வகையான தொலைபேசிகளை அறிமுகப்படுத்தக்கூடும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஸ்லைட்(Slide) செய்வதன் மூலம் டிஸ்ப்ளே பெரிதாகும்

சாம்சங் பெற இருக்கும் முதல் காப்புரிமையானது, ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் போலத் தோற்றமளிக்கும் ஒரு மாதிரி தொலைபேசியைக் காட்டுகிறது. ஆனால், அதன் திரையை கிடைமட்டமாக இழுக்க முடியும். இந்த தொலைபேசி, தற்போதுள்ள தொலைபேசிகளைப் போல மடிக்கவோ அல்லது திருப்பவோ செய்யாது. மாறாக, பயனருக்கு ஒரு பெரிய திரையை வழங்குவதற்காக வெளியே இழுக்க முடியும்(Slide). தேவையானவற்றை பார்த்து முடிந்ததும், அதை மீண்டும் ஸ்லைட் செய்து பழைய நிலைக்கு கொண்டுவந்து, ஒரு சாதாரண தொலைபேசியைப் போல எடுத்துச் செல்லலாம்.

மிகவும் சுவாரசியமான இரண்டாவது காப்புரிமை

சாம்சங் தாக்கல் செய்துள்ள இரண்டாவது காப்புரிமை மிகவும் சுவாரஸ்யமானது. இதில், டிஸ்ப்ளே முழுவதுமாக சாதனத்தின் உடற்பகுதிக்குள் இருக்கும். சாதனத்தின் இரு பக்கங்களில் ஏதேனும் ஒன்றை இழுப்பதன் மூலம் டிஸ்ப்ளே வெளியே வரும். இவ்வாறு பெரிய டிஸ்ப்ளேவை கீறல்கள் மற்றும் பிற சேதங்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று சாம்சங் கூறுகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு, டிஸ்ப்ளே மீண்டும் சாதனத்தின் உடற்பகுதிக்குள் சுருண்டுவிடும். டிஸ்ப்ளே எவ்வளவு இழுக்கப்படுகிறது மற்றும் அதன் வேகத்தை கண்டறியக்கூடிய சென்சார்கள் சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தொலைபேசியின் மென்பொருள் அமைப்பு சரிசெய்யப்படும்.

இந்தத் தொலைபேசிகள் உற்பத்தி நிலையை எட்டுமா.?

சாம்சங் தற்போது இந்த இரண்டு வடிவமைப்புகளுக்கும் காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. ஆனால், அவை உற்பத்தி நிலையை எட்டும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வடிவமைப்பு காப்புரிமைகளை தாக்கல் செய்கின்றன. ஆனால், அவற்றில் மிகச் சில மாடல்கள் தான் காகித ஆவணங்களைத் தாண்டி முன்னேறுகின்றன. எனவே, சாம்சங் இந்த காப்புரிமைகளை நிஜமாக்கி சந்தைக்குக் கொண்டு வரும் என்று முழு நம்பிக்கையுடன் கூறுவது சாத்தியமற்றது.

இந்த பிரிவில் ஆர்வம் கொண்டுள்ள சாம்சங்

சுருட்டக்கூடிய மற்றும் நகர்த்தக்கூடிய(Sliding) சாதனங்கள் பிரிவில் சாம்சங் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அந்நிறுவனத்தின் காட்சிப் பிரிவு, நகர்த்தக்கூடிய மற்றும் சுருட்டக்கூடிய OLED முன்மாதிரிகளை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சாம்சங் இந்த பிரிவை தீவிரமாக பின்தொடர்கிறது என்பது தெளிவாகிறது. இந்த தொலைபேசிகள் உற்பத்தி நிலையை எட்டினால், மடிக்கக்கூடிய தொலைபேசிகள் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு அவை தீர்வு காணக்கூடும்.

சாம்சங் இந்த மாடல்களை சந்தைக்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்பதே செல்போன் பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget