மேலும் அறிய

உங்கள் iPhone-ஐ குறிவைக்கும் DarkSword: பாஸ்வேர்டு திருட்டு பயம்! உடனே அப்டேட் செய்ய வேண்டியது ஏன்?

DarkSword தொடர்பான பாதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கண்டறிந்து, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட iOS 15 முதல் iOS 26 வரையிலான அப்டேட்களில் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கியுள்ளது

ஒரு சாதாரண இணையதளத்தைப் பார்ப்பதன் மூலமே உங்கள் போனில் உள்ள பாஸ்வேர்டு மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடும் "DarkSword" என்ற புதிய ஹேக்கிங் முறை கண்டறியப்பட்டுள்ளது ஐபோன் பயன்படுத்துவோரை அதிர்ச்சியிள் ஆழ்த்தியுள்ளது

DarkSword ஹேக்கிங் எவ்வாறு செயல்படுகிறது?

DarkSword என்பது ஒரு வகை "Fileless" ஹேக்கிங் முறையாகும். இது வழக்கமான ஸ்பைவேர் மென்பொருள்களைப் போல உங்கள் போனில் எதையும் இன்ஸ்டால் செய்யாது. மாறாக, உங்கள் போனில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டம் செயல்பாடுகளைப் பயன்படுத்தியே ரகசியத் தகவல்களைத் திருடுகிறது. ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள "iframe" எனப்படும் பகுதி வழியாக இந்தத் தாக்குதல் தொடங்குகிறது. அங்கிருந்து உங்கள் கடவுச்சொற்கள், மெசேஜ்கள், ஐக்ளவுட் (iCloud) தகவல்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வேலட் விவரங்கள் வரை அனைத்தையும் இது சேகரிக்கிறது.

இந்த ஹேக்கிங்கின் மிக ஆபத்தான அம்சம் என்னவென்றால், தரவுகளைத் திருடிய பிறகு இது தானாகவே தனது அனைத்து தடயங்களையும் அழித்துவிடும். இதனால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதை உங்களால் எளிதில் கண்டறிய முடியாது. தற்போது உக்ரைன், சவுதி அரேபியா, மலேசியா, துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் பரவியுள்ள இந்தத் தாக்குதல், எந்த நேரத்திலும் இந்தியாவிற்குள்ளும் நுழையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆப்பிளின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

DarkSword தொடர்பான பாதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கண்டறிந்து, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட iOS 15 முதல் iOS 26 வரையிலான அப்டேட்களில் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக iOS 18.4 முதல் iOS 18.6.2 வரையிலான பதிப்புகளை இது குறிவைப்பதால், ஆப்பிள் நிறுவனம் iOS 18.7 மற்றும் iOS 26 ஆகிய புதிய பதிப்புகளைப் பாதுகாப்புத் தீர்வுகளுடன் வெளியிட்டுள்ளது.

இன்னும் சுமார் 24% பயனர்கள் பழைய iOS 18 பதிப்புகளையே பயன்படுத்தி வருவதால், அவர்கள் உடனடியாகத் தங்கள் போன்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் iOS 13 அல்லது 14-ஐப் பயன்படுத்துபவர் என்றால், பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் iOS 15-க்காவது அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாகும். மேலும், சஃபாரி (Safari) பிரவுசரில் உள்ள 'Safe Browsing' வசதி இத்தகைய தீங்கிழைக்கும் இணையதளங்களை முன்கூட்டியே தடுத்து உங்களைப் பாதுகாக்கும் என்று ஆப்பிள் உறுதி அளித்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. என்னென்ன புதிய அம்சங்கள் தெரியுமா?
Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. புதிய அம்சங்கள் தெரியுமா?
ரூ.59,900 முதல் iPhone! புதிய iPhone 18 வருவதற்கு முன் ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிரடி சலுகை!
ரூ.59,900 முதல் iPhone! புதிய iPhone 18 வருவதற்கு முன் ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிரடி சலுகை!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
TN Weather News: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
MK Stalin:
MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
DMK:
DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget