Paytm Cashback: போட்டி நாட்களில் கேஷ்பேக் ஆஃபர்... Paytm அறிவித்திருக்கும் ‘4-க்கு 100 கேஷ்பேக்’ பெறுவது எப்படி?
Paytm Cashback: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட இருக்கும் டி20 தொடரின்போது ஆன்லைன் பணப்பரிமாற்ற ஆப்பான பேடிஎம்-ல் பிரத்யேக கேஷ்பேக் சலுகைகள் வழங்க இருப்பதாக பேடிஎம் அறிவித்திருக்கிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. அதனை அடுத்து, இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட இருக்கும் டி20 தொடரின்போது ஆன்லைன் பணப்பரிமாற்ற ஆப்பான பேடிஎம்-ல் பிரத்யேக கேஷ்பேக் சலுகைகள் வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. ’ ‘4 ka 100 cashback’ என்ற இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் கேஷ்பேக்கை பெறலாம்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 போட்டிகளுக்கான அட்டவணை
இடம்: கொல்கத்தா
பிப்ரவரி 16 - முதல் டி20 போட்டி
பிப்ரவரி 18 - இரண்டாவது டி20 போட்டி
பிப்ரவரி 20 - மூன்றாவது டி20 போட்டி
aaj phir #INDvWI hai, to aaj bhi valid! 😁
— Paytm (@Paytm) February 9, 2022
(only on your 1st UPI Payment) https://t.co/ZGByL5zzwV pic.twitter.com/8mMrHWhuvm
கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தும் முறை:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 போட்டிகளின்போது பேடிஎம் யூபிஐ வழியாக பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு, நிச்சயமாக 100 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப்பில் புதிதாக லாக்-இன் செய்பவர்களுக்கு ஒவ்வொரு 4 ரூபாய் பண பரிமாற்றத்தின்போதும் 100 ரூபாய் கேஷ்கேப் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, கூடுதல் கேஷ்பேக் சலுகையாக, உங்களது நண்பர்களையும், குடும்பத்தினரையும் பேடிஎம் அக்கவுண்ட் திறக்குமாறு ‘refer' செய்தால், refer செய்தவருக்கும், பேடிஎம்-ல் இணைந்தவருக்கும் தலா 100 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்