மேலும் அறிய
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
நொய்டா, லக்னோ, சென்னை மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் முன்பு நடைபெற்ற இதேபோன்ற கொண்டாட்டங்களைத் தொடர்ந்து மதுரையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

யுவன் சங்கர் ராஜா
Source : whatsapp
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியுடன் ஹெச்சிஎல் குழுமத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மதுரையில் தொடர்கின்றன.
ஹெச்சிஎல் குழுமம் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணம்
ஹெச்சிஎல் குழுமம் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தைக் குறிக்கும் வகையில், மதுரையில் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜாவின் சிறப்பான இசை நிகழ்ச்சியுடன் தனது பணியாளர்களுக்கான கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது. பிரபலமான தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், ஹெச்சிஎல் குழுமம் மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இசையின் இனிமையும், கொண்டாட்டத்தின் குதூகலமும் நிறைந்த மாலைப் பொழுதாக இது அமைந்தது. ஹெச்சிஎல் குழுமம் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழுமத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் பணியாளர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மிகவும் பிரபலமான பாடல்களைப் பாடி தமுக்கம் மைதானத்தையே கொண்டாட்ட தளமாக யுவன் சங்கர் ராஜா மாற்றினார். ஹெச்சிஎல் என்ற மாபெரும் குழுமத்தின் அங்கத்தினர்களான பணியாளர்கள் தங்களது நடனத்தின் வழியாகவும், இணைந்து பாடியும், இந்நிகழ்வை என்றும் மறக்க இயலாத ஒன்றாக ஆக்கினர்.
மதுரையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஹெச்சிஎல் குழுமத்தின் 50-வது ஆண்டைக் குறிக்கும் சிறப்பு இசை நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக நொய்டா, லக்னோ, சென்னை மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் முன்பு நடைபெற்ற இதேபோன்ற கொண்டாட்டங்களைத் தொடர்ந்து மதுரையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 11 – ம் தேதியில் தான் ஹெச்சிஎல் – ன் அதிகாரப்பூர்வ 50-வது ஆண்டு விழா நிகழ்ந்தது என்றாலும், ஐந்து தசாப்தங்களாக இந்த மாபெரும் உலகளாவிய நிறுவனத்தை உருவாக்கிய பணியாளர்களையும், அவர்களின் பகிரப்பட்ட பயணத்தையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நகரங்களிலும், குழுமப் பணியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இக்கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹெச்சிஎல் குழுமத்தின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு இசை நிகழ்ச்சித் தொடரில் மதுரை மாநகரில் நடைபெறும் இந்நிகழ்வு ஐந்தாவதாகும். இக்குழுமம் தனது ஐம்பது ஆண்டுகள் வெற்றிப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கேரேஜ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
இந்தியாவின் ஆரம்பகால ஐடி (தகவல் தொழில்நுட்பம்) கேரேஜ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றாக 1976-ல் நிறுவப்பட்ட ஹெச்சிஎல் குழுமம், நவீன கணினித் துறையின் முன்னோடியாக முதன் முறையாகப் பல சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரியது. உலகளாவிய நிறுவனங்களுக்கு முன்பாகவே 1978 ஆம் ஆண்டில் 8-பிட் நுண்செயலி அடிப்படையிலான கணினியை அறிமுகப்படுத்தியதும் இந்த சாதனைகளுள் ஒன்றாகும். இப்போது தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் திறன் மேலாண்மை தீர்வுகள் என பல்வேறு துறைகளில் ஹெச்சிஎல் குழுமம் இயங்கி வருகிறது. மேலும், இது ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம்ஸ், ஹெச்சிஎல்டெக் மற்றும் ஹெச்சிஎல் ஹெல்த்கேர் ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்தி வருகிறது. 60 நாடுகளில் 223,000 பணியாளர்களுடன் ஆண்டுக்கு 14.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வருவாயை ஈட்டும் பெருநிறுவன குழுமமாக ஹெச்சிஎல் இயங்குவது குறிப்பிடதக்கது"
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















