மேலும் அறிய

Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்...?

செல்போன் சிப் பற்றாக்குறை காரணமாக மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

கூகுள் நிறுவனம் தனது  Pixel 4a மாடலை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற அந்த மாடல் பட்ஜெட் விலையால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கவர்ச்சிகரமான சார்ப்ட்வேரும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணமாக இருந்தது.   Pixel 4a  இரு வகையான மாடல்களாக வெளியானது. ஒன்று 4ஜி மற்றொன்று 5ஜி. இந்த நிலையில் அடுத்த ஸ்மார்ட்போன் உலகம் 5ஜி என்ற நிலை வந்துவிட்டதால் கூகுள் தங்களுடைய போன் மாடலில் அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. அதன்படி 4ஜி மாடலை தவிர்க்கும் கூகுள் Pixel 5a (5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. சில மாதங்களாக இது தொடர்பாக தகவல்கள் வெளிவந்தாலும் உலகளவில் ஏற்பட்ட செல்போன் சிப் பற்றாக்குறையால் இந்த மாடல் வெளியாவதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் இப்போது Pixel 5a (5G) மாடல் வெளியீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்...?

Google Pixel 5a (5G)சிறப்பம்சங்கள்:

இந்த மாடலை பொருத்தவரை 156.2 x 73.2 x 8.8mm அளவு கொண்டதாகவும். 183 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கிறது. மெடல் யுனிபாடி வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது.

டிஸ்பிளேவை பொருத்தவரை 6.34 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஹோல் பஞ்ச் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 வகை ஆகும். இதன் ரெசொலேஷன் 2400 x 1080 ஆகவுள்ளது. இந்த மாடலுக்கு Qualcomm Snapdragon 765G வகை ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 

கேமராவை பொருத்தவரை பின்பக்கம் 12.2 மெகாபிக்ஸல் மற்றும் 16 மெகாபிக்ஸல் கொண்ட இரு வகையான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பக்க கேமராவை பொருத்தவரை 8 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டைப் சி USB 3.1 வகையும், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 


Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்...?
ஆண்ட்ராய்டு 11 கொடுக்கப்பட்டுள்ள Google Pixel 5a (5G) மாடலுக்கு 4,680mAh வகை பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு வையர் இணைப்பு இல்லாத சார்ஜர் கொடுக்கப்படவில்லை. ரேம் மற்றும் மெமரியை கணக்கிட்டால் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி கொண்டதாக இருக்கிறது.

Google Pixel 5a (5G) மாடல் புதிய வெளியீடு என கூகுள் அறிவித்திருந்தாலும் கடந்த வருடம் வெளியாகி இருந்த Pixel 4a 5ஜி மாடலைப் போலவே இருக்கிறது. அதிக வித்தியாசங்கள் ஏதும் இல்லாத நிலையில் சிறு சிறு அப்டேட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள் 30 வாட்ஸுக்கும் அதிகமான சார்ஜரை கொண்டுள்ளன. அதோடு ஒப்பீடு செய்யும் போது கூகுள் Pixel 5a (5G)பின் தங்கியே இருக்கிறது.

முக்கியமாக இந்த மாடல் இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டுமே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் சிப் பற்றாக்குறை காரணமாக மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. அமெரிக்கா, ஜப்பானில் உள்ள வரவேற்புக்கு ஏற்ப இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
ஏர்டெல் யூசர்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட் - ரூ.30,000 மதிப்புள்ள இலவச சலுகைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. பெறுவது எப்படி?
Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
Embed widget