மேலும் அறிய

IND vs BAN 2nd Test:இந்தியா - வங்கதேசம் 2 வது டெஸ்ட் - யார் உள்ளே? யார் வெளியே?

நாளை மறு நாள் செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை மறு நாள் செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும். இதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளதால் அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஏற்கனவே இடது கை சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா இருப்பதால் மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் களம் இறங்கலாம். மார்ச் 2024 இல் தரம்ஷாலாவில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிதான் குல்தீப்பின் கடைசி டெஸ்ட். குல்தீப் களம் இறங்கும் பட்சத்தில் ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ் இருவரும் வெளியேற வேண்டியிருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது டெஸ்டின் உத்தேச வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்/முகமது சிராஜ், குல்தீப் யாதவ்

 

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget