மேலும் அறிய

T20 World Cup 2022 AUS vs NZ: அபாரமாக பந்துவீசும் நியூசிலாந்து..! தோல்வியின் பிடியில் ஆஸ்திரேலியா..!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் சொற்ப ரன்களில்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதையடுத்து களம் புகுந்த மிட்செல் மார்ஷும் 16 ரன்களில் சவுதீ ஓவரில் ஆட்டமிழக்க அடுத்தடுத்த களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், விக்கெட் கீப்பர் மாத்யூ வேட் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

சூப்பர் 12 குரூப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 120 பந்துகளில் 201 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 குரூப் 1 சுற்றில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன், டிவோன் கான்வே ஆகியோர் களம் புகுந்தனர்.

தொடக்கம் முதலே ஃபின் ஆலன் அதிரடி காட்டத் தொடங்கினார். 16 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 42 ரன்களை விளாசினார். அதிரடி தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன், ஹேசில்வுட் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் போல்டு ஆனார்.

பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் டிவோன் கான்வே அரை சதம் பதிவு செய்தார். வில்லியம்சன் தோள் கொடுக்க கான்வே அதிரடி காண்பித்தார். 13வது ஓவரின் கடைசி பந்தில் ஜம்பா வீசிய பந்தில் எதிர்பாரதவிதமாக எல்பிடபிள்யூ ஆனார் வில்லியம்சன்.

பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக ஆடம் ஜம்பா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கான்வே 58 பந்துகளில் (2 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) 92 ரன்கள் விளாசினார். அவருடன் ஜேம்ஸ் நீஷம் 26 ரன்களுடன் (2 சிக்சர்கள்) களத்தில் இருந்தார்.

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget