Pro Kabaddi 2023: புரோ கபடி லீக்... தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமனம்!
புரோ கபடி லீக்கின் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
![Pro Kabaddi 2023: புரோ கபடி லீக்... தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமனம்! Pro Kabaddi 2023-24 Tamil Thalaivas Captain Sagar Rathee Check Full Squad PKL Season 10 Pro Kabaddi 2023: புரோ கபடி லீக்... தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/56c049432e802bfd3476abe54b5c0ac31701174942614732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புரோ கபடி லீக்:
இந்தியாவில் மக்கள் எந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கிறார்களே அதே அளவு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய ரசிகர்கள் நேரிலும், மைதானத்திற்கும் சென்று பார்த்தனர்.
இந்தியாவில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டான கிரிக்கெட்டிற்கு எப்படி ரசிகர்கள் அதிகமோ அதேபோல், இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் விளையாடப்படும் கபடிக்கும் அதே ரசிகர்கள் இருக்கின்றனர். இச்சூழலில், தான் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போட்டிகள் எப்படி லீக் போட்டிகளாக நடத்துப்படுகிறதோ அதேபோல், தான் கபடிக்கு என உருவாக்கப்பட்டது புரோ கபடி லீக்.
அதன்படி, இதுவரை புரோ கபடி லீக் தொடரில் 9 சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் தான் டிசம்பர் 2ஆம் தேதி புரோ கபடி லீக் போட்டி தொடங்கவுள்ளது. இந்த லீக்கில் களமிறங்கும் 12 அணிகளும் இம்முறை அவரவர் சொந்த களங்களில் விளையாடவுள்ளனர். இதனால் ரசிகர்கள் தங்களின் அபிமான அணி விளையாடுவதை நேரில் பார்க்க முடியும்.
டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த லீக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தன் 132 போட்டிகள் இந்த சீசனில் நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, உ.பி யோதா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டன்:
இதனிடையே இந்த 9 சீசன்களிலும் ஒரு முறை கூட தமிழ் தலைவாஸ் கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில் தான் 10-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம்.
அதன்படி, சாகர் ரதி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் கிலியா ஆகியோரை துணை-கேப்டன்களாகவும் தமிழ் தலைவாஸ் அணி நியமித்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்:
ரைடர்கள்: அஜிங்க்யா பவார் (லெஃப்ட் ரைடர்)
ஹிமான்ஷு நர்வால் (லெஃப்ட் ரைடர்)
நரேந்திர கண்டோலா (லெஃப்ட் ரைடர்)
ஹிமான்ஷு துஷிர் (ரைட் ரைடர்)
கே. செல்வமணி (ரைட் ரைடர்)
விஷால் சாஹல் (ரைட் ரைடர்)
நிதின் சிங் (ரைட் ரைடர்)
ஜதின் ஃபோகாட் (ரைட் ரைடர்)
எம். லக்ஷ்மன் (ரைட் ரைடர்) மற்றும் சதீஷ் கண்ணன் (ரைட் ரைடர்).
டிஃபெண்டர்கள்:
சாகர் ரதி ( (Right Corner)
ஹிமான்ஷு யாதவ் (Left Corner),
எம். அபிஷேக் (Right Cover),
சாஹில் குலியா (Left Corner),
மோஹித் ஜாகர் (Left Cover),
ஆஷிஷ் மாலிக் (Left Cover),
அமீர்ஹோசைன் பஸ்தாமி (Right Corner),
நிதேஷ் குமார் (Left Corner),
ரவுனக் கர்ப் (Right Cover),
மற்றும் முகமதுரேசா கபோத்ரஹங்கி (Left Corner).
ஆல்-ரவுண்டர்: ரித்திக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)