மேலும் அறிய

Tamil Thalaivas: எதிரணிகளை இறங்கி அடிக்கும் தமிழ் தலைவாஸ்; கெத்து காட்டும் இடங்கள் எது எது தெரியுமா?

Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் 2023- 24இல் கிட்டத்தட்ட 75 சதவீத போட்டிகள் முடிந்துவிட்டது. இதில் களமிறங்கியுள்ள 12 அணிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரையில் மிகவும் சிறப்பான அணியாக திகழ்ந்து வருவது மட்டும் இல்லாமல், இந்த சீசனின் முதலில் சரிவினைச் சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக கம்பேக் கொடுத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறி வருகின்றது. தமிழ் தலைவாஸ் அணி ப்ரோ கபடி லீக்கில் புள்ளிப்பட்டியல் மட்டும் இல்லாமல், கபடியில் உள்ள ஆட்ட நுணுக்கங்களில் தமிழ் தலைவாஸ் அணி எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதைக் காணலாம். 

தமிழ் தலைவாஸ் அணி கெத்து காட்டும் இடங்கள் 

மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் ரெய்டுகள் -  தமிழ் தலைவாஸ் அணி ரெய்டர்கள் இதுவரை மொத்தம் 776 சென்றதில் 270 ரெய்டுகள் புள்ளிகளுடன் திரும்பியுள்ளனர்.  இதனால் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. 

மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் டேக்கிள்ஸ் - தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் இந்த சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதுவரை அணிக்கு 205 புள்ளிகளை எடுத்து கொடுத்துள்ளனர். அதிக டேக்கிள் புள்ளிகள் எடுத்த வரிசையில் தலைவாஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் ஒரு போட்டியில் சராசரியாக 12.06 ரெய்டர்களை மடக்கியுள்ளனர். இந்த பட்டியலிலும் தலைவாஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை டிஃபெண்டர்கள்தான் அணியின் தங்கங்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளனர். குறிப்பாக அணியின் கேப்டன் சாகர் அணிக்கு அசுர பலத்தை கொடுத்து வருகின்றார். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை சூப்பர் டேக்கிள் பாய்ண்டுகளில் அதிக புள்ளிகள் எடுத்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 25 முறை சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளியுள்ளது. அதேபோல் டீம் டேக்கிள் பாய்ண்டுகளில் தமிழ் தலைவாஸ் அணி 230 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ஒரு அணியின் புள்ளிகள் அடிப்படையில் தலைவாஸ் அணி 624 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் டீம் ரெய்டு புள்ளிகள் தலைவாஸ் அணி 332 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அவ்ரேஜ் டீம் டேக்கிள் புள்ளிகளில் தமிழ் தலைவாஸ் அணி 13.53 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எதிரணியை தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 23 முறை ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டிக்கு எடுத்துள்ள புள்ளிக் கணக்கு என்பது ஆவரேஜாக 36.71 புள்ளிகளாக உள்ளது. இந்த அடிப்படையில் தலைவாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!
சொதப்புறீங்களே சாம்சன்! ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க! உங்க இடத்துக்கு செம போட்டி இருக்கு!
IND vs IRE T20: இந்தியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்த அயர்லாந்து! அலட்சியத்தால் அடி வாங்கிய டி20 சாம்பியன்!
IND vs IRE T20: இந்தியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்த அயர்லாந்து! அலட்சியத்தால் அடி வாங்கிய டி20 சாம்பியன்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget