Tokyo Olympics: துப்பாக்கிச்சுடுதலில் தொடரும் சோகம்; ஏமாற்றிய சஞ்சீவ், தோமர்!
ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 ப்ரோன் துபாக்கிச்சுடுதல் நடைபெற்றது. இதில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் மற்றும் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு 10 மீட்டர் ஏர் ரைஃபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டிலும் பெரிய சோகமே கிடைத்தது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல தவறினார்கள். இதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் நடைபெற்ற கலப்பு போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்ல தவறியது. இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 ப்ரோன் துபாக்கிச்சுடுதல் நடைபெற்றது. இதில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் மற்றும் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் 3 முறையில் துப்பாக்கிச்சுடுதல் செய்ய வேண்டும். முதலில் நீலிங், ப்ரோனிங் மற்றும் ஸ்டான்டிங் ஆகிய மூன்று வகையில் வீராங்கனைகள் சுட வேண்டும். இந்த மூன்று வகையில் மொத்தமாக வீராங்கனைகள் எடுத்த புள்ளிகள் வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவார்கள்.
இதில் சஞ்சீவ் ராஜ்புத் நீலிங் பிரிவில் 96,99,95,97 என மொத்தமாக 387 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,99,97,97 என மொத்தமாக 391 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் அவர் 93,94,95,95 என மொத்தமாக 377 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1157 புள்ளிகள் பெற்று இடத்தை 32ஆவது இடத்தை பிடித்தார்.
END of India's misery in Shooting 🙏
— India_AllSports (@India_AllSports) August 2, 2021
Aishwary Pratap Tomar & Sanjeev Rajput fail to qualify for Final of 50m Rifle 3P event.
Aishwary finished 21st (397+391+379) ; Sanjeev finished 32nd (387+393+377). #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/eT3GJQXlxh
மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வர்யா பிரதாப் சிங் நீலிங் பிரிவில் 99,100,98,100 என மொத்தமாக 397 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,99,97,97 என மொத்தமாக 391 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் 95,96,93,95 என மொத்தமாக 379 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1167 புள்ளிகள் பெற்று 20ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால் இரண்டு இந்திய வீரரர்களும் ஏமாற்றம் அளித்தனர்.
முன்னதாக மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3ப்ரோன் துபாக்கிச்சுடுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் அஞ்சும் மோட்கில் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அஞ்சும் மோட்கில் மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 1167 புள்ளிகள் பெற்று 15ஆவது இடத்தை பிடித்தார். தேஜஸ்வினி சாவந்த் 1154 புள்ளிகள் பெற்று 33ஆவது இடத்தை பிடித்தார். இதனால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
மேலும் படிக்க:ஆஸியை ஈஸியாய் தூக்கிய இந்தியா: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி அணி!