Tokyo olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் : மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுதிர்தா தோல்வி..!
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களுடைய முதல் சுற்றில் வெற்றிப் பெற்றனர். இன்று காலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் போர்ச்சுகல் வீரரை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுகல் வீராங்கனை யூ ஃபூவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யூ ஃபூ 11-3,11-3,11-5,11-5 என்ற கணக்கில் சுதிர்தாவை வீழ்த்தினார். இதன்மூலம் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து சுதிர்தா முகர்ஜி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.
#TableTennis :
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
Sutirtha Mukherjee goes down to higher ranked Fu Yu (WR 55) 0-4 in 2nd round. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/8o3TnW4BBq
முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் 1992ஆம் ஆண்டிற்கு பிறகு 29 ஆண்டுகள் கழித்து இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சர்வதேச தரவரிசை பட்டியலில் 98வது இடத்தில் இருக்கும் சுகிர்தா முகர்ஜி, 78-வது இடத்தில் இருக்கும் லிண்டா பெர்க்ஸ்டார்மை எதிர்கொண்டார். இந்த போட்டியின் ஆரம்பத்தில், சுகிர்தா சொதப்பினாலும், பின் சுதாரித்து கொண்டு கம்-பேக் கொடுத்தார். இந்த போட்டியில், 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் லிண்டாவை தோற்கடித்த அடுத்த சுற்றுக்கு சுகிர்தா முன்னேறியிருந்தார். இன்று மதியம் 1 ஒரு மணிக்கு நடைபெறும் மகளிர் மூன்றாவது சுற்றுப்போட்டியில் மானிகா பட்ரா மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் சோஃபியா போல்கானோவை எதிர்த்து விளையாட உள்ளார்.
Kya 𝙆𝙖𝙢𝙖𝙡 ki shuruaat hui hai iss Monday morning ki! 👏
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021
Watch Sharath Kamal's final two points from his second round 4-2 victory over #POR's Tiago Apolonia! 🏓#Tokyo2020 | #BestOfTokyo | #StrongerTogether | #UnitedByEmotion @sharathkamal1 pic.twitter.com/755QUihQYE
இன்று காலை ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சரத் கமல் களமிறங்கினார். இவர் போர்ச்சுகல் நாட்டின் டியாகோவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 39 வயதான சரத் கமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியை 4-2 என்ற கேம் கணக்கில் வென்று அசத்தினார்.
மேலும் படிக்க: டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவை அபார வெற்றியுடன் தொடங்கிய தமிழ்நாட்டின் சரத் கமல் !