(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Olympics 2020: ஈட்டி எறிதலில் பைனல் வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் அனு ராணி!
தனது பெஸ்ட் ரெக்கார்டான 63.24 மீட்டரை அனு ராணி வீசியிருந்தால், இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறி இருக்கலாம்.
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகளில் இன்று ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக அனு ராணி பங்கேற்றார். இதில், மொத்தம் 15 வீராங்கனைகள் கலந்து கொண்ட க்ரூப் ஏ பிரிவில் அனு ராணி பங்கேற்றார்.
தகுதிச்சுற்று போட்டியின் தனது முதல் வாய்ப்பில், 50.35 மீட்டர் வீசினார். இரண்டாவது வாய்ப்பில், 53.19 மீட்டர் வீசினார். மூன்றாவது வாய்ப்பில், 54.04 மீட்டர் வீசினார். போட்டி முடிவில், 14வது இடம் பிடித்து பின் தங்கினார் இந்தியாவின் அனு ராணி. தனது பெஸ்ட் ரெக்கார்டான 63.24 மீட்டர் வீசியிருந்தால், இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறி இருக்கலாம். இதனால், இறுதிச்சுற்றுக்கு செல்லாமல் போட்டியில் இருந்து வெளியேறினார் அனு ராணி.
#Athletics :
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
END of Annu Rani's dismal campaign.
Finishes 14th in Group A (out of 15) Qualification with best attempt of 54.04m.
Annu's PB: 63.24m #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/q9ex3P193G
முன்னதாக, நேற்று மாலை நடைபெற்ற வட்டு எறிதல் இறுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பங்கேற்றிருந்தார். அதில் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 61.62 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் கவுர் ஃபவுல் செய்தார். மூன்றாவது வாய்ப்பில் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் வீசி 6ஆவது இடத்திற்கு முன்னேறினார். முதல் மூன்று வாய்ப்புகளுக்கு பிறகு கடைசி 4 இடத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் மீதம் இருந்த 8 வீராங்கனைகள் நான்காவது வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்தியா வீராங்கனை கவுர் ஃபவுல் செய்தார். ஐந்தாம் வாய்ப்பில் அவர் 61.37 மீட்டர் தூரம் வீசினார்.
Discus Thrower Kamalpreet Kaur misses OUT on a medal but wins hearts with her performance; Finished 6th with best attempt of 63.70m
— India_AllSports (@India_AllSports) August 2, 2021
Proud of your overall effort Kamalpreet
PS: Her PB 66.59m would have placed her at 4th pace #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ZQi3HABU1A
இறுதியில் ஆறாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். இதனால் 6ஆவது இடம் பிடித்தார். தன்னுடைய ரெக்கார்டு தூரத்தை நேற்று வீசியிருந்தால் அவருக்கு பதக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல் ஒலிம்பிக் போட்டியில் 6வது இடம் பிடித்து நம்பிக்கை அளிக்கிறார்.