Tokyo Olympics Updates: ஒலிம்பிக் தேர்வாளர்களுக்கு குவியும் தலைவர்களின் வாழ்த்து!
கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tokyo Olympics | ஒலிம்பிக் தடகள போட்டி - தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் தேர்வு#TokyoOlympics https://t.co/TPMwTyamjE
— ABP Nadu (@abpnadu) July 6, 2021
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என முக்கிய ஆளுமைகள் பலரும் ஐந்து வீரர்களை பாராட்டி பதிவு செய்துள்ளனர். பொது மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மதுரை சக்கிமங்கலம் ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொண்டேன். பெற்றோரை இழந்து-பாட்டி அரவணைப்பில் வளர்ந்து - ஷு இல்லாமல் ஓடிய ரேவதியை,அவரது தன்னம்பிக்கை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது. பதக்கம் வெல்ல தங்கைக்கு வாழ்த்துகள். pic.twitter.com/Gd2eo4iBEU
— Udhay (@Udhaystalin) July 6, 2021
மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 6, 2021
அவர் பதக்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!#OlympicGames pic.twitter.com/Y2ZdCsKl8w
எங்கள் மதுரை தடகள வீராங்கனை #ரேவதிவீரமணி வறுமையை வைராக்கியமாக ஓடியே தாண்டி
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 6, 2021
இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில்
பங்கேற்பது எவ்வளவு பெரிய முன்னுதாரணம்.
தங்கப் பதக்கத்தை வென்று நமது மண்ணிற்கு பெருமை சேருங்கள், எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.#Olympics2021 #TokyoOlympics2021 pic.twitter.com/ccHo3eFDgN
Proud Moment. 5 Tamil Nadu athletes will participate in the #TokyoOlympics as a part of Mixed & Men's Relay.
— SG Suryah (@SuryahSG) July 6, 2021
டோக்கியோ ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ள ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி. மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/pcy7zP9EiX
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், விடாமுயற்சியுடன் பயிற்சியினை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களின் உச்சக் கனவான ஒலிம்பிக் போட்டியில் 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஒட்டத்தில் கலந்து கொள்ளும் தகுதியினை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
— O Panneerselvam (@OfficeOfOPS) July 6, 2021