Tokyo Olympics Wrestling: ஒலிம்பிக் மல்யுத்தம் : வெண்கலத்தை இழந்து தீபக் புனியா ஏமாற்றம்..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று போட்டியில் தீபக் புனியா நைஜீரிய வீரர் அகியோமர் எக்ரெக்மேவை எதிர்த்து போட்டியிட்டார். இதில், 12-1 என்ற புள்ளிக்கணக்கில் அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அவர். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில், சீன வீரர் லின் சுஷினை எதிர்த்து விளையாடி 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அத்துடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் தீபக் புனியா அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் அமெரிக்க வீரர் சிறப்பாக செயல்பட்டு 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் தீபக் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தீபக் புனியா சான் மெரினோ நாட்டைச் சேர்ந்த அமீன் நசீமை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சான் மெரினோ அமீன் 4-2 என்ற கணக்கில் தீபக் புனியாவை தோற்கடித்தார். இதனால் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தீபக் புனியா இழந்தார்.
News Flash:
— India_AllSports (@India_AllSports) August 5, 2021
Wrestling: Deepak Punia loses Bronze medal bout (FS 86kg) 2-4 to Myles Amine. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/hSjo85SstF
முன்னதாக இன்று காலை நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்றார். இவர் முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனையை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிச் சுற்றில் பெலாரஷ்ய வீராங்கனை வனிசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். 53 கிலோ எடைப்பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக இருந்த வினேஷ் போகட் காலிறுதியில் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.பெலாரஷ்ய வீராங்கனை அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதனால் வினேஷ் போகட் ரெபிசாஜ் ரவுண்டிற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் வினேஷ் போகட் வெளியேறி உள்ளார்.
இன்று காலை மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் உகுயேவிடம் 4-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் மல்யுத்தம் : வெள்ளி வென்றார் ரவிகுமார் தாஹியா..!