மேலும் அறிய

Paris Olympics 2024: பெண்ணாகவே பிறந்தேன்..பெண்ணாகவே பதக்கம் வென்றுள்ளேன்! அல்ஜீரியா வீராங்கனை இமான் கஃலீப்

மற்ற பெண்களை போல் நானும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணாகவே பிறந்தேன். பெண்ணாகவே வளர்ந்தேன். பெண்ணாக தான் பதக்கம் வென்றுள்ளேன் என்று அல்ஜீரிய வீராங்கனை இமான் கலீஃப் கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீஃப் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீஃப் ஒரு பெண்ணே அல்ல, அவர் ஒரு ஆண் என்று இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி குற்றம் சாட்டியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இமான் கலீஃப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டன. ஆனால் தன் பாலினம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத இமான் தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார். அதில், "கடந்த 8 ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது மட்டுமே எனது கனவாக இருந்தது. இப்போது நானும் ஒலிம்பிக் சாம்பியன். தங்கப் பதக்கம் வென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஆதரவாக பாரீஸ் உள்ள அனைத்து அல்ஜீரியா மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியை அல்ஜீரியா மக்களுக்கும், என் குழுவினருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

பெண்ணாகவே பிறந்தேன்.. பெண்ணாகவே வளர்ந்தேன்:

எனது வெற்றியால் அல்ஜீரியாவில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்றபதே விளையாட்டு வீரர்களாக திறமையை வெளிப்படுத்துவதற்கு தான். மீண்டும் இதுபோன்ற தாக்குதல்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க நான் முறையாக தகுதிபெற்றுள்ளேன்.

மற்ற பெண்களை போல் நானும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணாகவே பிறந்தேன். பெண்ணாகவே வளர்ந்தேன். பெண்ணாக தான் பதக்கம் வென்றுள்ளேன். என்னை எதிரியாக நினைக்கும் சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இந்த வெற்றிக்காக 8 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளேன். 8 ஆண்டுகளாக தூக்கம் இழந்து பயிற்சி செய்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் இமான் கலீஃப்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Honda Activa Ev: ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் - 150 கிமீ ரேஞ்ச்? கூடுதல் அம்சங்கள், வெளியீடு எப்போது?
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Madurai: அதிமுகவின் சூரசம்ஹாரம் திமுக என்கிற தீய சக்தியை வதம் செய்வது தான் - ஆர்.பி.உதயகுமார்!
Embed widget