Elavenil Valarivan: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. துப்பாக்கி சுடுதல்! தங்கம் வெல்ல காத்திருக்கும் இளவேனில் வாலறிவன்! யார் இவர்?
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்து கொள்ள உள்ள இளவேனில் வாலறிவன் யார் என்பது தொடர்பான தகவல்களை காண்போம்
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான்.
ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.இதில் தமிழ்நாடு சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்து கொள்ள உள்ள இளவேனில் வாலறிவன் யார் என்பது தொடர்பான தகவல்களை காண்போம்:
இளவேனில் வாலறிவன் யார்?
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பிறந்தவர் இளவேனில். பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இவர் களம் கண்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இச்சூழலில் தான் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட காத்திருக்கிறார். இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்கிடம் பயிற்சி பெற்றவர்.
விருதுகள்:
- 2018 ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கூட்டாக தங்கப்பதக்கம்.
- 2018 ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தனியாக வெள்ளி பதக்கம்.
- 2022 ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் வெண்கலப்பதக்கம்.
- 2019 ISSF உலகக் கோப்பை தங்கப்பதக்கம்.
- உலகக் கோப்பை தங்கப் பதக்கம் - முதல் இடம் 2019 ரியோ டி ஜெனிரோ 10 மீ ஏர் ரைபிள்
- தங்கப் பதக்கம் - முதல் இடம் 2023 ரியோ டி ஜெனிரோ 10 மீ ஏர் ரைபிள்
- தங்கப் பதக்கம் - முதல் இடம் 2021 புது டெல்லி 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி
- தங்கப் பதக்கம் - முதல் இடம் 2022 பாகு 10 மீ ஏர் ரைபிள் அணி
- வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2022 சாங்வான் 10 மீ ஏர் ரைபிள் அணி
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2019 தோஹா 10 மீ ஏர் ரைபிள் அணி - தங்கப் பதக்கம் - முதல் இடம் 2019 தாயுவான் 10 மீ ஏர் ரைபிள் அணி
வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2019 தாயுவான் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி - வெள்ளிப் பதக்கம் - இரண்டாவது இடம் 2024 ஜகார்த்தா 10 மீ ஏர் ரைபிள்
- ஜூனியர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் - 2018 சிட்னி 10 மீ ஏர் ரைபிள் முதல் இடம் - தங்கப் பதக்கம் - முதல் இடம் 2018 சிட்னி 10 மீ ஏர் ரைபிள் அணி
- தங்கப் பதக்கம் - முதல் இடம் 2018 சுஹ்ல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி
- தங்கப் பதக்கம் - 2019 சுஹ்ல் 10 மீ ஏர் ரைபிள் முதல் இடம்
- தங்கப் பதக்கம் - 2019 சுஹ்ல் 10 மீ ஏர் ரைபிள் அணி முதல் இடம்
- வெண்கலப் பதக்கம் - மூன்றாம் இடம் 2018 சுஹ்ல் 10 மீ ஏர் ரைபிள் அணி
- உலக பல்கலைக்கழக விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் - முதல் இடம் 2021 செங்டு 10 மீ ஏர் ரைபிள் - வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2021 செங்டு 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி