Watch Video: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் சக வீரர் காதல் ப்ரபோஸ் - ஓகே சொன்னாரா?
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனையிடம் சக வீரர் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது காதலை அல்லது காதல் துணையிடம் போட்டி முடிந்த பிறகு வெற்றியுடன் அல்லது மைதானத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். அதுபோன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அதுபோன்ற சம்பவங்களும் பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்துள்ளது.
தங்கமகளுக்கு காதல் ப்ரபோஸ்:
ஒலிம்பிக்கில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் சீன வீராங்கனை இருந்த ஹியாங் யா கியாங்க்கு மற்றொரு இனிப்பான சம்பவமும் அரங்கேறியது.
தங்கம் வென்ற உற்சாகத்தில் இருந்த தங்கமகள் ஹியாங் யா கியாங்கிடம் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார். மேலும், தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டார்.
காதலை ஏற்றாரா தங்கமகள்?
"I’ll love you forever! Will you marry me?"💍
— Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) August 3, 2024
"Yes! I do!"#Olympics style Romance! 💝
Chinese #badminton player Huang Yaqiong (黄雅琼) just won a badminton mixed doubles #gold medal🥇with her teammate Zheng Siwei(郑思维).
Her boyfriend Liu Yuchen(刘雨辰) proposed!💍 pic.twitter.com/6RWUX4Be4L
அதைப்பார்த்த மகிழ்ச்சியில் லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். பின்னர் லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார். இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தங்கம் மற்றும் காதல் பரிசில் மகிழ்ச்சியில் திளைத்த ஹிவாங் யாவிற்கு இதுதொடர்பாக எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து பேட்டி அளித்த வீராங்கனை ஹிவாங், “ என்னால் இந்த உணர்வை விவரிக்கவே முடியவில்லை. ஏனென்றால் எனக்கு சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம். நிச்சயதார்த்த மோதிரத்தை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு இது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. நான் போட்டிக்குத்தான் தயாராகிக் கொண்டிருந்தேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.