Breaking News LIVE, AUG 4: சீமான் மீது வழக்குப்பதிவு!
Breaking News LIVE, August 4: உள்ளூர் தொடங்கி உலக நிகழ்வுகள் வரையிலான, முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
LIVE
Background
- கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சென்றது காவிரி நீர் - சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 4 புதுக்கோட்டை மீனவர்கள் கைது - தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராஅக் தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்
- வய்நாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 24 பேர் தமிழர்கள் - காணாமல் போன மேலும் 25 பேரை தேடும் பணி தீவிரம்
- சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து காட்பாடி வர வெற்றிகரமாக நடைபெற்ற வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் - வேகம் மற்றும் சிக்னல் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு
- ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி, குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
- சென்னையில் சட்ட விதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கு சீல் வைத்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ கடந்தது - 6வது நாளாஅக் தொடரும் மீட்பு பணி
- இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி - காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
- பாரிஸ் செல்ல பஞ்சாப் முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு - ஒலிம்பி போட்டிகளை காண திட்டமிட்டிருந்த பகவந்த் மான்
- காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 5 போலீசார் உட்பட 6 பேர் பணி நீக்கம்
- இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது
- பாரிஸ் ஒலிம்பிக் - பேட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இன்று களமிறங்குகிறார்
- பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் ஹாக்கி காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இன்று களம் காண்கிறது
சீமான் மீது வழக்குப் பதிவு!
சீமான் மீது வழக்குப் பதிவு!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அனுமதியே பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கலைஞரின் நினைவுநாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி , சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து பேரணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் காலம் கடந்தும் போற்றப்படும் #SocialJustice நகர்வுகளால் இலட்சக்கணக்கானோரின் நெஞ்சங்களில் நாள்தோறும் நன்றியோடு நினைவுகூரப்படுகிறார் தலைவர் கலைஞர்!
— M.K.Stalin (@mkstalin) August 4, 2024
நிறைவாழ்வு வாழ்ந்த நீடுபுகழ் கலைஞரின் நினைவு நாளில் நன்றி செலுத்தக் கூடிடுவோம்!#கலைஞர்100 #LetterToBrethren pic.twitter.com/tLvaJfQOIU
3 மணி நேரத்தில் சென்னை உட்பட 34 மாவட்டங்களில் மழை
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Breaking News LIVE, AUG 4: இரவு 10 மணிவரை 34 மாவட்டங்களில் மழை - வானிலை மையம்
Breaking News LIVE, AUG 4: இரவு 10 மணிவரை 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை , தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நெல்லை, குமரி ஆகிய 34 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Wayanad Relief Materials : மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்த கோவையைச் சேர்ந்த ஜீவ சாந்தி அறக்கட்டளையினர்
வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்த கோவையைச் சேர்ந்த ஜீவ சாந்தி அறக்கட்டளையினர். தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி, கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.