மேலும் அறிய

Tokyo Olympic | 7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் வரும் 24-ஆம் தேதி முதல் தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 7 நாட்கள் உள்ளன. இதில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று ஹாக்கி. இம்முறை 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தற்போதைய ஃபார்ம் சிறப்பாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கம் வென்ற அணி என்ற பெருமையை இந்தியா தன் வசம் வைத்துள்ளது. அத்துடன் ஹாக்கி விளையாட்டில் இதுவரை 8 தங்கம், 1 ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக இந்தியா 11 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. 

ஒலிம்பிக் வரலாற்றில் 1928ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. கடைசியாக 8ஆவது தங்கப்பதக்கத்தை 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் வென்றது. அதன்பின்னர் 40 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிகில் பதக்கம் வெல்லவில்லை. இந்தச் சூழலில் தற்போது உலக தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் அணி இம்முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Tokyo Olympic | 7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?

ஆடவர் ஹாக்கி டோக்கியோ ஒலிம்பிக் அட்டவணை:

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியின் போட்டிகள் வருமாறு:

  • 24.07.2021:- இந்தியாvs நியூசிலாந்து(காலை 6.30 மணி)
  • 25.07.2021:- இந்தியா vs ஆஸ்திரேலியா(மதியம் 3.00 மணி)
  • 27.07.2021:-இந்தியா vs ஸ்பெயின்(காலை 6.30 மணி)
  • 29.07.2021:- இந்தியா vs அர்ஜென்டினா(காலை 6.00 மணி)
  • 30.07.2021:-இந்தியா vs  ஜப்பான்(மதியம் 3.00 மணி)

 குரூப் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும். காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதியும், அரையிறுதிச் சுற்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. 

மகளிர் ஹாக்கி அணி:

இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அப்போது தான் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த முறை இந்திய மகளிர் அணி 4ஆவது இடத்தைப் பிடித்தது. அது தான் தற்போது வரை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த செயல்பாடாக உள்ளது. 


Tokyo Olympic | 7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?

அதன்பின்னர் 36ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது. அதில் சுஷிலா சானு தலைமையிலான இந்திய மகளிர் அணி குரூப் போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது மூன்றாவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய மகளிர் அணி தற்போது 9ஆவது இடத்தில் உள்ளது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், ஐயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இந்தியாவுடன் இடம்பெற்றுள்ளன. இந்திய மகளிர் அணியின் போட்டிகள் வருமாறு:

  • 24.07.2021:- இந்தியாvs நெதர்லாந்து(மாலை 5.15 மணி)
  • 26.07.2021:- இந்தியா vs ஜெர்மனி (மாலை 5.45 மணி)
  • 28.07.2021:-இந்தியா vs பிரிட்டன்(காலை 6.30 மணி)
  • 30..07.2021:- இந்தியா vs ஐயர்லாந்து (காலை 8.15 மணி)
  • 31.07.2021:-இந்தியா vs தென்னாப்பிரிக்கா (காலை 8.45 மணி)

குரூப் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும். காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஆகஸ்ட் 2-ஆம் தேதியும், அரையிறுதிச் சுற்று ஆகஸ்ட் 4ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க: 8 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget