Subha Venkatesan: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. தடகள வீராங்கனை திருச்சி மங்கை சுபா வெங்கடேசன்! யார் இவர்?
பாரீஸ் ஒலிம்பிக் 2024 , 4*400 ரிலே ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான்.
ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 4*400 ரிலே ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
திருச்சி மங்கை சுபா வெங்கடேசன்:
இந்திய தடகள வீரரான சுபா வெங்கடேசன் திருச்சியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை வெங்கடேசன் கட்டிடத் தொழிலாளி. தாயர் பூங்கொடி இல்லத்தரசி. தடகளத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையில் உள்ள பெண்களுக்கான சிறப்பு மையத்தில் பயிற்சியாளர் இந்திரா சுரேஷிடம் பயிற்சி பெற்றார்.
2023ல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலப்பு 4*400 ரிலே ஓட்டத்திலும், மகளிர் 4*400 ரிலே ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். இச்சூழலில் தான் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4*400 ரிலே ஒட்டத்தில் களம் காண்கிறார்.
12 ஜூன், 2024ல் பெங்களூருவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 52.34 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இது போன்ற தன்னுடைய சிறப்பான செயல்பாடுகள் மூலம் கவனிக்கப்படும் வீராங்கனையாக உருவெடுத்திருக்கிறார் சுபா வெங்கடேசன்.