Asian Yoga Sports Cup: காமாட்சி.. வில்வ முத்தீஸ்வரி.. ஆசிய அளவிலான யோகாசன போட்டி; தங்கம் வென்ற ராமநாதபுரம் வீராங்கனை
தமிழ்நாடு யோகாசன பயிற்சி மற்றும் யோகாசன போட்டியாளர்கள் மத்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சியும், வில்வ முத்தீஸ்வரியும் பேசுபொருளாக மாறியுள்ளனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்ற வீராங்கனை, இந்தியா சார்பில் பங்கேற்றார். 24 முதல் 28 வயதுக்கு உட்பட்ட பாரம்பரிய யோகா சுற்று மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான குழு யோகா சுற்று ஆகிய 2 போட்டிகளில் முதலிடம் பிடித்த காமாட்சி 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். மேலும் இவர் மற்றொரு போட்டி முறையான யோகா ஆர்ட்டிஸ்டிக் ஃபேர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என ராமநாதபுரம் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் 14 முதல்18 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் கடலாடி மலட்டாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ் 2 மாணவி வில்வ முத்தீஸ்வரி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் ஒரே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 2 தங்கம் மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளதால் தமிழ்நாடு யோகாசன பயிற்சி மற்றும் யோகாசன போட்டியாளர்கள் மத்தியில் காமாட்சியும், வில்வ முத்தீஸ்வரியும் தான் பேசுபொருளாக மாறியுள்ளனர்.